Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை - பென்டகன் ஏவுகணை தாக்குதல் இலக்கில் வட கொரியா எச்சரிகை


வட கொரியா  தொடர்ந்து ஏவுகணைகள் சோதனை நடத்தி வருகிறது. இது தென்கொரியா,  ஜப்பான் உள்ளிட்ட  நாடுகளுக்கு அச்சத்தையும், மிரட்டலையும் ஏற்படுத்தி உள்ளது.  கொரிய தீபகற்பகத்தில் பதட்டத்தை உருவாக்கியது.  இதற்கு அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை கண்டனம்  தெரிவித்தன.

வடகொரியா  மீது பொருளாதார தடை விதித்துள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாத வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.தெ ன் கொரியாவுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் எப்போது வேண்டுமானால் போர் ஏற்படலாம் என உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.இதற்கிடையே தென் கொரியாவுக்கு ஆதரவாகவும் தமக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா எச்சரித்திருந்து.

தற்போது அமெரிக்காவுக்கு எதிராக மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் அரசாங்க ஊடகமான டிபிஆர்கே வெளியிட்டு உள்ள செய்தியில், 15 வருடங்களுக்கு முன்னர் 3 பேர் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரம் பேர் பலியாகினர்.
இது அமெரிக்காவுக்கு மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது. ஆனால் மேற்கொள்ளும் இறுதி யுத்தத்தின் வெளிப்பாடாக வரலாற்றில் இருந்தே அமெரிக்கா துடைத்தெடுக்கப்படும்.

இந்த தாக்குதல் தொடர்பாக கவலைப்படுவதற்கு கூட அவர்களுக்கு நேரம் இல்லாமல் செய்துவிடுவோம். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனை வடகொரியாவின் ஏவுகணை மற்றும் ஆயுதங்கள் தரை வழியாகவும், வான்வழியாகவும், கடல் வழியாகவும் குறி வைத்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.

வடகொரியாவில் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்காவுக்கு வட கொரியா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.