Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2016

மீனை கூட பாதுகாக்க முடியாத மோடியால் எப்படி எல்லையை பாதுகாக்க முடியும் சோனியா காந்தி கடும் தாக்கு


இந்திய கடல்பரப்பில் மீனை கூட வெளிநாட்டு மீனவர்களிடம் இருந்து பாதுகாக்க முடியாத மோடியால் எப்படி எல்லையை பாதுகாக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மேற்குவங்காள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் இதுவரையில் 4 கட்ட தேர்தல்கள் முடிந்து உள்ளது. 5-வது கட்டமாக 53 தொகுதிகளுக்கு 30-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்திய கடல்பரப்பில் வெளிநாட்டவர்களிடம் இருந்து மீனை கூட பிரதமர் மோடியால் பாதுகாக்க முடியவில்லை, அவரால் எப்படி எல்லையை பாதுகாக்க முடியும் என்று விமர்சனம் செய்து உள்ளார்.

”பாரதீய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மீனவர்களின் இழுவை படகுகளுக்கு தடை விதித்துவிட்டது, ஆனால் வெளிநாட்டு மீனவர்கள் வெளிப்படையாகவே இந்திய கடல்பரப்பில் மீன்பிடித்து வருகின்றனர். எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக அதிகமான வாக்குறுதிகளை பிரதமர் மோடி கொடுத்து வருகிறார், ஆனால் உங்களுடைய மீனை அவரால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் எப்படி அவர் நம்முடைய எல்லையை பாதுகாப்பார்? சமீபத்திய பதன்கோட் தாக்குதலே இதற்கு உதாரணம் ஆகும்,” என்று சோனியா காந்தி கூறிஉள்ளார்.

கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்களின் நிலையானது மிகவும் மோசமாக உள்ளது, மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் மீனவர்களை அவர்களது பணியை விட்டுசெல்ல வைத்து உள்ளது என்றும் சோனியா காந்தி கூறிஉள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.