சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் புகுந்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒடிசா மாநில ஆசாமி கைது செய்யப்பட்டார். அவருடைய கூட்டாளி தப்பி ஓடிவிட்டார்.
வங்கி ஏ.டி.எம். மையம்
அண்ணா சதுக்கம் எதிரில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த ஏ.டி.எம். மையத்தின் காவலாளியாக சோமு (வயது 65) என்பவர் பணியாற்றுகிறார். கோட்டை அருகே உள்ள சத்யா நகரை சேர்ந்த காவலாளி சோமு, நேற்று முன்தினம் இரவு வங்கி ஏ.டி.எம்.மில் காவல் பணியில் ஈடுபட்டார். நள்ளிரவில் அவர் அசந்து தூங்கிவிட்டதாக தெரிகிறது. அப்போது 2 மர்மநபர்கள் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு நபர் கையில் உள்ள சுத்தியலால் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தை உடைத்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே கோட்டை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ரோந்து போலீசார் விரைந்து வந்தனர்.
ஒருவர் சிக்கினார்
ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களையும் ரோந்து போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர். அவர்கள் இருவரும் தப்பி ஓடினார்கள். போலீசார் விரட்டி சென்றனர். நேப்பியர் பாலம் அருகே வைத்து மர்ம ஆசாமி ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவரின் பெயர் ராஜேஷ் (எ) முன்னா, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். தப்பி ஓடியவர் பெயர் ராகேஷ் அவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்தான்.
நண்பர்களான இவர்கள் இருவரும் சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். பிடிபட்ட முன்னாவை அண்ணாசதுக்கம் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ராகேஷை போலீசார் தேடிவருகிறார்கள். இவர்கள் இருவரும் வேறு கொள்ளை சம்பவத்தில் ஏதாவது ஈடுபட்டுள்ளார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.