லண்டன்,
கடந்த 1849–ம் ஆண்டு, இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்யத்தை பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி படைகள் தோற்கடித்தன. சீக்கிய சாம்ராஜ்யத்தின் சொத்துகளையும் கவர்ந்து சென்றன. அப்படி எடுத்துச் சென்ற பொருட்களில், பழமையான, பிரசித்திபெற்ற கோஹினூர் வைரமும ஒன்றாகும். ஒரு ஒப்பந்தம் மூலம், அது கிழக்கு இந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது அந்த 108 காரட் வைரத்தை இங்கிலாந்து மகாராணி விக்டோரியா அணிந்து வந்தார்.
இத்தகைய பின்னணி கொண்ட கோஹினூர் வைரத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவில் அவ்வப்போது கோரிக்கை எழுந்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, கோஹினூர் வைரம், இங்கிலாந்து அரசால் திருடிச் செல்லப்படவும் இல்லை, வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்படவும் இல்லை. மகாராஜா ரஞ்சித் சிங்கால் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று தெரிவித்தது.
இந்த நிலையில், இந்திய அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனில் நீண்ட காலமாக எம்.பியாக இருந்து வருபவரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கெயித் வாஸ், கோஹினூர் வைரம் விவகாரத்தில் இந்திய அரசின் முடிவுக்கு மதிப்பும் ஆதரவும் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.