டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் வாகனங்களை ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு எண் அடிப்படையில் முறை வைத்து இயக்கும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு உள்ளது. இந்த திட்டம் சோதனை அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், 2–ம் கட்ட சோதனை கடந்த ஏப்ரல் 15-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இது வருகிற ஏப்ரல் 30–ந்தேதி வரை அமலில் இருக்கும்.அந்தவகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலே ஏராளமானோர் விதிமீறலில் ஈடுபட்டு வழக்கு பதிவுக்கு ஆளாகினர்.
இதனிடையே இந்த வாகனக் கட்டுப்பாடு அமலில் உள்ளதை பயன்படுத்தி பிரபல இணையதள வாடகை கார் நிறுவனங்களான உபேர், ஒலா போன்றவை கூடுதல் கட்டணங்கள் வசூலித்ததாக புகார் எழுந்தன. இதையடுத்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் “அரசு பரிந்துரைத்துள்ள தொகையை விட அதிகமாக வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிறுவனங்களின் பர்மிட் ரத்து, வாகனங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று எச்சரித்து இருந்தார்.
இதையடுத்து கூடுதல் கட்டண தொகையை குறைத்து இரு வாடகை கார் நிறுவனங்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இது குறித்து உபேர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தேவை அதிகரிக்கும் பொழுது கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமான நடைமுறைதான். பிஸியான காலகட்டங்களில் ஏர்லைன்ஸ் மற்றும் ஓட்டல்களில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படும். உபேரும் இதைத்தான் செய்துள்ளது. உரிமம் ரத்து செய்யப்படும் என்று டெல்லி அரசு மிரட்டியதால், தற்காலிகமாக கூடுதல் கட்டண உயர்வை ரத்து செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. இதேபோல், ஒலா நிறுவனமும், டெல்லி அரசு முன்னெடுத்துள்ள திட்டத்துக்கு உதவும் வகையில், விலை உயர்வை தற்காலிகமாக ரத்து செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.