Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 14, 2016

இந்தியாவின் இரும்பு பெண் யாஸ்மின் மனாக்!


யாஸ்மின் மனாக், இவர் 36 வயதுடைய பெண் மட்டுமல்ல IBBF (Indian Body Building Federation) ஆல் மிஸ் 2016ஆக தேர்வு செய்யப்பட்ட பெண்.

ஒரு சராசரி பெண்ணைப் போல காட்சியளிக்கும் இவர், கடந்த 17 வருடமாக பளுதூக்குதலில் (weight lifting) ஈடுபட்டு வருகிறார். இதுவரை யாஸ்மின் 2 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார்.


இவர் கூறுகையில்," ஆண்கள் மட்டுமே அநேகமாக இருக்கும் இத்துறையில் பயணம் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், என் வீட்டாரும், நண்பர்களும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். பல பேர் என்னை பற்றி பல விதமாகப் பேசினாலும் நான் அதை கண்டுகொள்ளாமல் வந்ததே என் வெற்றிக்கு காரணம்". மேலும், "சராசரி பெண்ணாக இருப்பது மிகவும் போர் அடிக்கும் ஒரு விஷயம். எனக்கு பளுதூக்குதல் மிகவும் பிடிக்கும். ஏற்கெனவே மற்ற ஆண்களைவிட அதிக சதை உள்ளது".

தற்போது யாஸ்மின் குர்கௌனில் 300-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயிற்சி அளிக்கும் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் இப்போது 2016-ல் பூட்டானில் நடக்கவிருக்கும் Asian Bodybuilding and Physique Championshipல் கலந்து கொள்வதற்கு கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் இன்னும் பல தங்க பதக்கங்களை வெல்ல வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.