அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்தவர் கென்னத் ஏர்ல் பல்ட்ஸ் (வயது 47). இவர் கடந்த 1996-ம் ஆண்டு ஸ்பால்டிங் நகரில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் இருந்த கேத்தி பவுண்ட்ஸ் (19) என்ற பெண்ணின் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றார். கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த அவரை பார்த்து கேத்தி பவுண்ட்ஸ் அதிர்ந்து போனார்.
மேலும் தன்னை கொன்றுவிட வேண்டாம் என கேத்தி பவுண்ட்ஸ், அவரிடம் உயிருக்கு மன்றாடியதோடு தனது கையில் அணிந்திருந்த மோதிரங்களை கழற்றி கொடுத்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாத கென்னத் அவரை படுக்கை அறைக்கு இழுத்து சென்று கீழே தள்ளி அவரது பின் தலையில் 5 முறை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொடூரமான முறையில் கொன்றார்.
இது தொடர்பாக போலீசார் கென்னத்தை கைது செய்தனர். விசாரணையில் இந்த கொலை சம்பவத்துக்கு முன், கென்னத் தனது முன்னாள் தோழியின் புதிய காதலரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்றதும் தெரியவந்தது.
கேத்தி பவுண்ட்ஸ் கொலை வழக்கில் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து 1997-ம் ஆண்டு அவருக்கு மரணதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்தநிலையில் மரண தண்டனையை எதிர்த்து கென்னத் பரோல் வாரியத்தில் கருணை மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த திங்கட்கிழமை நிராகரிக்கப்பட்டது. அதேபோல் மரண தண்டனைக்கு இடைக்காலத்தடை விதிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.
அதனை தொடர்ந்து உடனடியாக நேற்றுமுன்தினம் ஜாக்சன் நகரில் உள்ள மாநில சிறையில் கென்னத்துக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.