Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 15, 2016

சீனாவில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் 18 பேர் சாவு


சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் உள்ளது டாங்குவான் நகர். இங்கு சீனாவின் தகவல் தொடர்பு கட்டுமான நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்று கட்டிடங்களை கட்டி வந்தது. நேற்று 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் இடியுடன் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 80 டன் எடை கொண்ட ராட்சத கிரேன் கட்டப்பட்டு கொண்டிருந்த 2 மாடி கட்டிடத்தின் மீது சரிந்து விழுந்தது. அப்போது கட்டிடத்துக்குள் 139 தொழிலாளர்கள் இருந்தனர்.

அவர்களில் 88 பேர் அலறி அடித்துக்கொண்டு வெளியே தப்பி ஓடி வந்தனர். இருந்த போதிலும் 36 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களில் 18 பேர் இறந்து விட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 18 பேரை மீட்புபடையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்றவர்கள் கதி என்ன ஆனது என தெரியவில்லை.

அந்த கட்டுமான நிறுவனம் இந்த விபத்தின் மூலம் ஏற்பட்ட இழப்பீட்டை சரிசெய்ய 31 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.20 கோடியே 68 லட்சம்) ஒதுக்கீடு செய்து உள்ளது.

விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இந்த விபத்து தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.