சென்னையில் நேற்று வெயில் அளவு திடீரென 107 டிகிரியை எட்டி மக்களை வறுத்து எடுத்தது. வெப்பக்காற்று வீசுவதால் மேலும் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வாட்டி வதைக்கும் வெயில்
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வேலூர், திருச்சி, மதுரை, தர்மபுரி, கரூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைத்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் வரை வெப்பத்தின் அளவு 100 டிகிரியை ஒட்டிய அளவிலேயே இருந்தாலும் அனல்காற்று வீசியதால் வெப்பம் அதிகரித்து இருந்தது.
சென்னையில் 107 டிகிரி
சென்னையில் நேற்று வெயிலின் கொடுமை திடீரென அதிகரித்தது. நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 105.44 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 107.24 டிகிரியும் வெயில் பதிவானது. ஒரே நாளில் திடீரென இப்படி உயர்ந்து வெயில் வறுத்து எடுத்ததால் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
தமிழகத்திலேயே அதிக அளவாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையில் உள்ள திருத்தணியில் 109.4 டிகிரி வெயில் கொளுத்தியது.
துவண்டுபோன மக்கள்
கடுமையான வெப்பம் மற்றும் அனல்காற்றால் சென்னையில் நண்பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. வெயிலில் அலைந்தவர்களும் வெப்பத்தில் துவண்டு போனார்கள். தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர், இளநீர், சர்பத், எலுமிச்சை சாறு உள்ளிட்டவற்றை மக்கள் அருந்தி வெப்பத்தை சற்று தணித்துக் கொண்டனர்.
சிலர் வெப்பம் தாங்க முடியாமல் குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி குடிப்பதற்கு பதிலாக தலையில் ஊற்றிக்கொண்டதையும் காணமுடிந்தது. கைக்குட்டையை குளிர்ந்த நீரில் நனைத்தும் தலையில் போட்டுக்கொண்டனர்.
வீடுகள், அலுவலகங்களிலும் மின்விசிறிகள் வெப்பக்காற்றையே வெளியிட்டன. பஸ்களில்பயணிகள் பிடித்துக் கொள்ளும் கம்பிகள் கூட நெருப்பாய் சுட்டன. பகல் முழுவதும் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த மக்கள் மாலையில் மெரினா போன்ற கடற்கரைகளுக்கு சென்று இளைப்பாறினர்.
2 நாட்களுக்கு நீடிக்கும்
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வெப்பக்காற்று மேற்கில் இருந்து தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வீச உள்ளது. அதன் காரணமாக 2 அல்லது 3 செல்சியஸ் (3.6 முதல் 5.4 டிகிரி வரை) வெயில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.
வழக்கமாக கடல்காற்று பகல் 2.30 மணி அளவில் தரையை நோக்கி வீசத்தொடங்கும். அப்படி வீசினால் வெப்பம் குறையும். வறண்ட வெப்பக்காற்று மேற்கில் இருந்து வீசுவதால் கடல் காற்று வீசுவது தாமதமாகும். எனவே இந்த 2 நாட்களும் தேவையில்லாமல் வெயிலில் செல்வதை தவிர்க்கலாம்.
இவ்வாறு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.