என்னுடைய மனைவியை கண்டுபிடிக்க உதவிசெய்யுங்கள் என்று ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவிற்கு ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் கோரிக்கை விடுத்து உள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்தவர் வினெய் பாபு(வயது 28). அங்குள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். என்னுடைய மனைவியை அவருடைய குடும்பத்தினர் கடத்திவிட்டனர் என்று குற்றம் சாட்டிஉள்ளார். வினெய் பாபு காதலித்து திருமணம் செய்த மம்தா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். சாதி மாறி திருமணம் செய்த மம்தாவை அவருடைய பெற்றோர்கள் ஜோத்பூருக்கு கடத்திவிட்டனர் என்று குற்றம் சாட்டிஉள்ளார். வினெய் பாபு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவிற்கு கோரிக்கை விடுத்து உள்ளார். ”என்னுடைய மனைவியை ஒருமாதமாக காணவில்லை... அவருடைய பாதுகாப்பு குறித்து நான் மிகவும் கவலை அடைந்து உள்ளேன். அவர் பத்திரமாக இருந்தால் என்னுடன் பேசியிருப்பார்,” என்று பாபு கூறிஉள்ளார்.
தன்னுடைய மனைவியை கண்டுபிடிக்க ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்திய உதவிசெய்ய வேண்டும் என்று கூறிஉள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு மம்தாவை பாபு சந்தித்து உள்ளார், பின்னர் காதலித்து 2 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து உள்ளார். இதனையடுத்து புதுமண தம்பதியினர் தங்களுக்கு பெண் வீட்டாளர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். போலீசாரும் சமாதானத்திற்கு இருதரப்பிற்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். மம்தாவும் என்னுடைய பெற்றோர்களால் பாதுகாப்பிற்கு அச்சம் உள்ளது என்று கூறியிருந்து உள்ளார். இருப்பினும் உள்ளூர் போலீசார் மம்தாவிற்கு பாதுகாப்பு அளிப்பது சாத்தியமற்றது என்று கூறிஉள்ளனர்.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு தம்பதியினர் வேறு வீட்டிற்கு மாறிஉள்ளனர். பாபு வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது மம்தாவை காணவில்லை. இதுதொடர்பாக போலீசாரிடம் பேசிய அப்பகுதி மக்கள், மம்தாவை சிலர் வலுக்கட்டாயமாக இழுத்துசென்றனர் என்று கூறிஉள்ளனர். இது தொடர்பாக ஐதராபாத் மூத்த போலீஸ் அதிகாரி ஆனந்த் ரெட்டி பேசுகையில், “நாங்கள் கடத்தல் வழக்கு பதிவு செய்து உள்ளோம். ஜோத்பூர் மாவட்டத்திற்கு தனி குழுவையும் அனுப்பி உள்ளோம். இருப்பினும் மம்தாவை குழு கண்டுபிடிக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்,” என்று கூறிஉள்ளார்.
ஜோத்பூரில் மம்தாவின் பெற்றோர்களும் ஒருபுகாரை போலீசில் கொடுத்து உள்ளனர், அதில் மம்தா திருமணத்திற்கு பின்னர் 5 கிலோ தங்கத்துடன் ஓடிவிட்டார் என்று.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.