வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக பொதுமக்கள் பிடித்துக் கொடுத்த சிறுவன், போலீஸ் நிலையத்தில் இருந்த போது தப்பி ஓடிவிட்டான். அவனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தனர்
சென்னை வளசரவாக்கம், கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் பின் பகுதியில் ஏதோ சத்தம் கேட்டதால் அங்கு சென்று பார்த்தார். அங்கு யாரோ மர்ம ஆசாமி ஒருவன், வீட்டின் பின்பக்க கதவில் இருந்த பூட்டை உடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் முத்துக்குமரன், அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆசாமியை மடக்கி பிடித்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
16 வயது சிறுவன்
போலீஸ் விசாரணையில் அவன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரிந்தது. மேலும் விசாரணையில் அவன், பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உடையவன் என்பதும் தெரியவந்தது.
இந்தநிலையில் நேற்று காலை போலீஸ் நிலையத்தில் இருந்த சிறுவன், தான் கழிவறை செல்ல வேண்டும் என்று கூறினான். இதனால் அவனை போலீஸ் நிலையத்துக்கு வெளியே உள்ள கழிவறைக்கு போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
தப்பி ஓட்டம்
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கழிவறையின் உள்ளே இருந்து சிறுவன் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது கழிவறையின் உள்ளே இருந்த ஜன்னல் வழியாக அந்த சிறுவன் தப்பி ஓடிவிட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடி பார்த்தும் சிறுவனை காணவில்லை. இதையடுத்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.