வெளிநாடுகளில் எனக்கு உள்ள சொத்து விபரங்களை கேட்க வங்கிகளுக்கு உரிமை கிடையாது என்று தொழில் அதிபர் விஜய் மல்லையா கூறிஉள்ளார்.
என்னை போன்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுடைய வெளிநாட்டு சொத்து விபரங்களை தெரிவிக்கவேண்டிய கட்டாயம் கிடையாது என்று மல்லையா தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
மல்லையா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள 41 பக்க அபிடவிட்டில், வெளிநாட்டில் உள்ள என்னுடைய சொத்துக்கள் மற்றும் குழந்தைகள் சொத்து விபரங்களை கேட்க எனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு உரிமை கிடையாது. என்னுடைய குழந்தைகள் வெளிநாட்டவர்கள், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் அதேபோன்று பிரிந்து வாழும் என்னுடைய மனைவியும் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஆவார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு வங்கிகள் கடன் கொடுக்கும் போது என்னுடைய சொத்துக்களை வங்கிகள் கருத்தில் கொள்ளவில்லை என்றும் வாதிட்டுஉள்ளார்.
எனவே என்னுடைய சொத்துக்களை அணுக அனுமதிக்க எந்தஒரு காரணமும் கிடையாது என்றும் அவரது தரப்பில் வாதிடப்பட்டு உள்ளது. இருப்பினும் தனக்கு மற்றும் மனைவி, குழந்தைகளுக்கு உள்ள வெளிநாட்டு சொத்துக்களின் தற்போதைய தோராய மதிப்பு $114.571 மில்லியன் அல்லது ரூ. 780 கோடியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளார். வழக்கு விசாரணைக்கு வரும் 26-ம் தேதி சொத்துக்களின் மதிப்பு அடங்கிய குறிப்பிட்ட விபரம் சீலிடப்பட்ட கவரில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கத்துறை கடிதம்
பிரபல தொழில் அதிபரும், டெல்லி மேல்சபை எம்.பி.யுமான விஜய் மல்லையா (வயது 60) பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தவில்லை. இதனால் வங்கிகள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 2–ந் தேதி இங்கிலாந்துக்கு விஜய் மல்லையா சென்று விட்டார்.
சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறையும் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. மே மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமலாக்க பிரிவு இயக்குனரகத்தின் கோரிக்கையை ஏற்று, வெளியுறவுத்துறை அமைச்சகம் விஜய் மல்லையாவின் சிறப்பு பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்கு முடக்கி வைத்தது.
இதனிடையே விஜய் மல்லையா மீது, சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மும்பை சிறப்பு கோர்ட்டில் ஐ.டி.பி.ஐ. வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று, விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்துக்கு, அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது.
அதில், விசாரணைக்கு விஜய் மல்லையா ஒத்துழைப்பு வழங்க மறுப்பதால் அவருடைய பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது? என குறிப்பிட்டுள்ளது. மேலும் சர்வதேச போலீஸ் மூலமாக விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக்கோரி சி.பி.ஐ.க்கும் அமலாக்கத்துறை கடிதம் எழுத உள்ளது. அமலாக்கத்துறை கடிதம் குறித்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகத்தின் உதவியை நாடி உள்ளோம் என்றனர்.
கடந்த 7–ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரூ.4 ஆயிரம் கோடியை செலுத்த விஜய் மல்லையா முன்வந்துள்ளதாக அவருடைய வக்கீல்கள் தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த ஸ்டேட் வங்கி சார்பில் ஆஜரான வக்கீல்கள், முழு தொகையையும் செலுத்த வேண்டும் என்றும், அடுத்த விசாரணைக்கு விஜய் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து ரூ.4 ஆயிரம் கோடி திருப்பி செலுத்தும் மல்லையாவின் திட்டத்தை நிராகரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு கணிசமான தொகையை வங்கி கூட்டமைப்பில் செலுத்துமாறு உத்தரவிட்டனர்.
இதில் அவரது ஈடுபாட்டை காட்டும் வகையில் அவருக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பங்குகள் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும் 21–ந்தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறும், அப்போது எவ்வளவு தொகை செலுத்தப்படும்? என்பதையும் மல்லையா தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை 26–ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில் நேற்று உறுதிச்சான்றை விஜய் மல்லையா சார்பில் அவருடைய வக்கீல் தாக்கல் செய்து உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.