Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 9, 2016

தொழிலில் தோல்வியடையாமல் இருக்க 8 வழிகள்!


எல்லோருக்கும் பிசினஸ் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால் எங்குத் தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தினால் ஒதுங்குகிறார்கள்.

இனி ஒதுங்கத் தேவையில்லை. இதோ பிசினஸில் தோல்வியைத் தகர்த்து வெற்றியடைய எட்டு வழிகள்



1. ஒரு பிசினஸானது அதன் வாடிக்கையாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


2. மக்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு பல சமயங்களில்  தெரிவதில்லை. நாம்தான்  அவர்களுக்கு அதைச் சொல்ல வேண்டும். எனவே அதற்கேற்ப மார்க்கெட்டிங் உத்திகள் வேண்டும்.


3. ஏற்கெனவே சந்தையில் உள்ள பிசினஸாக இருந்தால், வித்தியாசமான அணுகுமுறையும், நுணுக்கங்களும் வேண்டும்.


4. நம்முடைய பிசினஸ் நம் போட்டியாளர்களைவிட மேலானதாக இருக்க வேண்டுமே தவிர, குறைச்சலாக இருக்கக் கூடாது.


5. சாத்தியமில்லாத எதிர்பார்ப்புகளை நோக்கி ஓடாமல், படிப்படியாக இலக்குகளை நிர்ணயித்து உழைக்க வேண்டும்.


6. சந்தையையும் மக்களையும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.


7. துறைசார்ந்த வழிகாட்டி ஒருவரை கலந்தாலோசிப்பது நல்லது.


8. சரியான திட்டமிடல், தொழில்நுட்ப நிபுணத்துவமும், சந்தையைப் பற்றிய அறிவும் கொண்ட திறமையான குழு அவசியம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.