Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 7, 2016

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள்; கருணாநிதி- கிருஷ்ணசாமி சந்திப்பில் உடன்பாடு!


திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, இன்று மாலைக்குள் கூட்டணியை அறிவிப்பேன்; வெற்றிக் கூட்டணியில் இடம்பெறுவோம் எனக் கூறியிருந்தார்.

கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள்; கருணாநிதி- கிருஷ்ணசாமி சந்திப்பில் உடன்பாடு!!




இதனைத் தொடர்ந்து கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து பேசினார் கிருஷ்ணசாமி. இச்சந்திப்பின் போது திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.