Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 15, 2016

வன்முறை, முழு அடைப்பு எதிரொலி காஷ்மீரில் 3–வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ராணுவத்தை கண்டித்து காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்துவருவதாலும், முழு அடைப்பு போராட்டம் காரணமாகவும் அங்கு 3–வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ராணுவத்தை கண்டித்து
காஷ்மீர் மாநிலம் ஹன்ட்வாரா நகரில் ராணுவ வீரர் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி ராணுவத்தை கண்டித்து போராட்டம் வெடித்தது. இதில் தொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததால் ராணுவம் துப்பாக்கி சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியதில் 4 பேர் இறந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து அங்கு பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நாள் முழுவதும் தொடர்ந்து ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்களும் நடந்தது. இதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த குப்வாரா நகர், கிரல்கண்ட், ஹன்ட்வாரா, மகம், லாங்கேட் ஆகிய பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

முழு அடைப்பு
சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவும், வதந்திகள் பரப்புவதை தடுப்பதற்காகவும் வடக்கு காஷ்மீரில் 6 போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் செல்போன் இணையதள சேவை முடக்கப்பட்டது.

பிரிவினைவாதிகள் குழு ஒன்று நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இந்த போராட்டத்துக்கு சில அமைப்புகளும் வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் மார்க்கெட்டுகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அரசு போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலைகள் வெறிச்சோடின. ஒரு சில தனியார் வாகனங்கள் மட்டுமே ஓடின.

3–வது நாளாக பாதிப்பு
இதன் காரணமாக காஷ்மீரின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று 3–வது நாளாக பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலிலோ அல்லது போலீஸ் நிலையங்களிலோ காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து பாலங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக கூடுதல் ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக நேற்று நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனாலும் சில இடங்களில் மட்டும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதில் ஒரு வேன் டிரைவர் காயம் அடைந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.