முதல் கதை
டால்ஸ்டாய்க்கு அப்போது எட்டு வயது. வானத்தில் பறவைகள் பறப்பதைப் பார்த்து, தனக்கும் அது போல் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. குதிகாலின் மீது உட்கார்ந்து முழுங்காலைக் கட்டிக் கொண்டால் பறக்க முடியும் என்ற எண்ணம் அவர் மனதில் எப்படியோ புகுந்து விட்டது. எவ்வளவுக் கெவ்வளவு முழங்காலை இறுகக் கட்டிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக உயரத்தில் பறக்கலாம் என்றும் நினைத்தார்.
டால்ஸ்டாய் தன் மனதில் தோன்றுவதையெல்லாம் உடனே செய்துவிட வேண்டுமென்ற பிடிவாத குணம் படைத்தவர். ஆகவே, தாம் நினைத்ததைச் செய்ய சமயம் பார்த்திருந்தார்.
அதற்கான சரியான சமயமும் வாய்த்தது. வீட்டார் மாஸ்கோவிற்குப் போய்விட்டனர். சாப்பிடுவதற்காக மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருந்தவனுக்குத் திடீரெனப் பறக்கும் ஆசை தோன்றியது. இருபதடி உயரத்தில் இருக்கும் ஜன்னலின் ஓரத்தில் உட்கார்ந்த படியே மேல் நோக்கிப் பறக்க முயன்றார். அம்முயற்சியின் பலனாக, அவர் கீழே விழுந்து மூளைக்கு அதிர்ச்சி ஏற்பட்டு, ஒருநாள் முழுவதும் சுய நினைவற்றுக் கிடந்தார்.
அத்துடன் அவருக்கு, பறக்கும் எண்ணமும் பறந்தோடியது.
இரண்டாம் கதை!
ஒருநாள் டால்ஸ்டாய் தமக்கு மிகவும் பிரியமான மாஷ்கா என்ற குதிரை மீது சவாரி செய்து கொண்டிருந்தார். இரண்டு வேட்டை நாய்கள் அவருடன் சென்றன. பாதையில் ஒரு முயல் தென்பட வேட்டை நாய்கள் முயலைத் துரத்த ஆரம்பித்தன. டால்ஸ்டாய் வேட்டைக் கென்று புறப்படவில்லை.
முயலை நாய்கள் தூரத்திச் சென்றதால் குதிரையை அவற்றின் பின்னே செலுத்தினர். அப்போது சீதோஷ்ண நிலை சரியாயில்லை. தரை வழுக்கலாயிருந்தது. அதனால் குதிரை கால் இடறிக் கீழே விழுந்தது. டால்ஸ்டாயும் கீழே விழுந்தார். டால்ஸ்டாயின் கையெலும்பு முறிந்தது.
விழுந்த இடத்திலேயே மயக்கமாகி கிடந்தார். மயக்கம் தெளிந்ததும், சுமார் அரை மைல் தூரம் மார்பால் ஊர்ந்து கொண்டே போய் மெயின் ரோட்டை அடைந்தார். வலியோ பொறுக்க முடியவில்லை. வண்டிகள் அவ்வழியாகப் போய்க் கொண்டிருந்தன. ஆனால், யாரும் அவரைக் கவனிக்கவில்லை.
பிறகு ஓர் குடியானவன் இவர் நிலையைக் கண்டு இரங்கி, தன்னாலான உதவியைச் செய்தான். இந்த விஷயம் டால்ஸ்டாயின் மனைவிக்குத் தெரிந்து நடுநிசியில் வந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பின்பு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்தனர். ஆறு மாதம் பூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஒரு வாரத்திற்குள் டால்ஸ்டாய் தமது கை சரியாகி விட்டதா என்பதைச் சோதனை செய்து பார்க்க ஒரு துப்பாக்கியை எடுத்து சரியாய் சுட முடிகிறதா என்று பார்த்தார். அதன் விளைவாக, மறுபடியும் நரம்பு பிசகி கை அதிகமாக வலிக்க ஆரம்பித்தது. மாஸ்கோவிலுள்ள அவர் மாமனாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சில தினங்களில் இரண்டு வைத்திய நிபுணர்களுடன் வந்து மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்து விரைவில் கையை குணமாக்கினார். இப்படிப்பட்ட வாலுதான் டால்ஸ்டாய்.
***

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.