Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

16 பொது துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு: முழு இந்தியாவும் விற்காபடுமொ?


 
லாபத்தில் இயங்கும் பொதுத்துறையை சேர்ந்த 16 நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 40 ஆயிரம் கோடி நிதி திரட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 29ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில் பொது துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் வாயிலாக நடப்பு ஆண்டில் ரூ. 56 ஆயிரம் கோடி நிதி திரட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. லாபத்தில் இயங்கும் பொது துறை நிறுவனங்களின் பங்குகளில் 5 முதல் 10 சதவீதம் அளவுக்கு விற்பனை செய்வதன் வாயிலாகவும், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்வதன் மூலமாகவும் இந்த நிதியை திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இதை தொடா்ந்து எந்தெந்த நிறுவனங்களின் பங்குகளை விற்கலாம் என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது. அதன்படி லாபத்தில் இயங்கி வரும் இயற்கை எரிவாயு கழகம், ஆயில் இந்தியா, கோல் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகளை நடப்பு ஆண்டில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ரூ. 40 ஆயிரம் கோடி நிதி திரட்டப்படும் என தொிகிறது. இந்த பட்டியலில் என்எம்டிசி, எம்ஒஐஎல், எம்எம்டிசி, நேஷனல் பெர்டிலைசர்ஸ், என்எச்பிசி, நால்கோ, பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனங்களின் பங்குகளை கடந்த நிதி ஆண்டின் இறுதியிலேயே விற்க திட்டமிடப்பட்டது. 

ஆனால் அப்போது அவற்றின் பங்குகளின் விலை மிகவும் குறைவாக இருந்ததால் விற்பனை செய்யும் முடிவு தள்ளி வைக்கப்பட்டது. பொது நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் உபரி நிதி வைத்துள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சந்தையிலிருந்து பங்குகளை வாங்கிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோல் இந்தியாவின் 10 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி கிடைக்கும். இதே போல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 9 ஆயிரம் கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.