Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 30, 2016

ஹெல்மெட்டை கட்டாயம் போட வைக்க இப்படியும் செய்யலாம்!


இப்படி ஒரு சட்டம் வந்தால் எப்படி இருக்கும்? நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு, இரு சக்கர வாகன ஓட்டிகளை வலியுறுத்தி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சென்னையின் முக்கிய சாலைகளில் கூட இன்றும்  பலரின் மண்டைகளில் ஹெல்மெட்டை காணோம்.
இந்நிலையில், ஹெல்மெட் அணிந்தால்தான் பங்குகளில் பெட்ரோல் நிரப்பப்படும் என ஒரு சட்டத்தை கொண்டுவந்து, அது நீடிக்கவும் செய்தால், ஹெல்மெட் அணியாதவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை அமல்படுத்தி, ஊரின் முக்கால்வாசி வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணியச் செய்துள்ளார், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள, கண்ணபுரம் எனும் கிராமத்தின் காவல்துறை உதவி ஆய்வாளர் பினு மோகன். அந்த கிராமத்தில் உள்ள மூன்று பெட்ரோல் பங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப மறுக்கின்றனர். கடந்த நான்கு மாதங்களில், கண்ணபுரம் கிராமத்தில் 28 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் ஹெல்மெட் அணியாத காரணத்தால் மட்டுமே, இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதை அறிந்த, அந்த மாவட்ட எஸ்.பி, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, ஏதேனும் புதிய யோசனைகளை சொல்லுமாறு, சக காவலர்களிடம் கேட்டுள்ளார். அப்போதுதான் தன் திட்டத்தை கூறியுள்ளார் பினு மோகன்.
இந்த திட்டம் அமலானதில் இருந்து, 75 சதவீதத்திற்க்கும் அதிகமான இருசக்கர வாகன ஓட்டிகள்,  ஹெல்மெட் அணிந்து செல்வதாக கூறி பெருமை கொள்கிறார் பினு மோகன். ஆனாலும், சிலர், பாட்டிலில் பெட்ரோல் வாங்கியும், பக்கத்து ஊருக்கு சென்று பெட்ரோல் நிரப்பியும், கட்டாய ஹெல்மெட் திட்டத்திற்கு "கல்தா" கொடுத்து வருகின்றனர்.

இதனால் இந்த திட்டம் ஏப்ரல் மாதத்தில் இருந்து கண்ணுர் மாவட்டம் முழுதும் அமலுக்கு வருகிறது. இதை அனைத்து நகரங்களிலும் அமல்படுத்தினால், பல உயிரிழப்புகளை தவிர்க்கலாம். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.