Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 29, 2016

‘‘கடன் பாக்கியை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ விஜய் மல்லையாவுக்கு அருண் ஜெட்லி எச்சரிக்கை


கடன் பாக்கியை திரும்பச் செலுத்தாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் மல்லையாவுக்கு அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பலவந்த நடவடிக்கை
வங்கிகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரிடம் கடன் பாக்கியை பெற்றுத்தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, விஜய் மல்லையா விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:–
கடன் பாக்கியை திரும்பச் செலுத்தாதவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் தனித்தனியாக நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், விஜய் மல்லையாவை போன்ற பெரிய குழுமங்கள், வங்கிகளிடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த வேண்டியது, அவர்களது கடமை. அவரது நிறுவனங்கள், வங்கிகளுக்கு சில உத்தரவாதங்கள் அளித்திருக்கும் என்று கருதுகிறேன்.
எனவே, கடன் பாக்கியை திரும்ப வசூலிக்க வங்கிகள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும். விசாரணை அமைப்புகளுடன் இணைந்து, பலவந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கான வழிமுறைகளும் உள்ளன. எனவே, கடன் பாக்கி வைத்துள்ளவர்கள், அதை நேர்மையாக செலுத்த வேண்டும் அல்லது பலவந்த நடவடிக்கையை சந்திக்க வேண்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசின் வீழ்ச்சி
காங்கிரஸ் கட்சி பற்றி அருண் ஜெட்லி கூறியதாவது:–
ஒவ்வொரு மாநிலமாக பார்த்தால், காங்கிரஸ் கட்சி எண்ணற்ற தலைவர்களை இழந்து வருகிறது. இந்திய அரசியலில் 60 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிற, 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, திடீரென பின்னடைவை சந்தித்து வருகிறது. இது தேசிய கட்சிகள் சந்திக்கக்கூடாத நிலை.
காங்கிரசில், எத்தனையோ உயர்ந்த தலைவர்கள், கட்சி மேலிடத்துடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இத்தகைய தலைமையின் குறைபாடுகள்தான், காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம்.
தமிழ்நாடு
கேரளாவில், கோஷ்டி பூசல் காரணமாக, காங்கிரசின் பெயர் கெட்டு விட்டது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் அழிந்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் சுருங்கி வருகிறது. அசாம் மாநிலத்தில், மூத்த தலைவர்கள் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.
டெல்லியில் போன முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது 8 சதவீத ஓட்டுகளையே கையில் வைத்துள்ளது. பஞ்சாபிலும் காங்கிரஸ் சுருங்கி வருகிறது. அசாம், அருணாசலபிரதேசத்திலும் காங்கிரசுக்கு பலத்த அடி கிடைக்கும்.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநில அரசியல் குழப்பத்தைப் பொறுத்தவரை, அது காங்கிரசின் உள்கட்சி விவகாரம். அங்குள்ள மூத்த தலைவர்களாலேயே காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்திக்க முடியவில்லை.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமாரை சந்திக்க முடிந்த ராகுல் காந்திக்கு, தங்களை சந்திக்க முடியவில்லையா? என்று கேட்டு அதிருப்தி அணியை உருவாக்கி விட்டனர்.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.