Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 29, 2016

தனியார் நிறுவனத்தின் 2 இயக்குனர்கள் குற்றவாளிகள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் முதல் தீர்ப்பு


நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தனியார் நிறுவனத்தின் 2 இயக்குனர்கள் குற்றவாளிகள் என சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் பெரும் அளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த முறைகேடு காரணமாக மத்திய அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்தது.
சிறப்பு கோர்ட்டு விசாரணை
இந்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதுபோல மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பரத் பராசர் முன்பாக நடந்து வருகிறது.
இதில் ஜார்கண்ட் இஸ்பத் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களும் சகோதரர்களுமான ஆர்.எஸ்.ருங்தா, ஆர்.சி. ருங்தா மற்றும் இஸ்பத் நிறுவனம் ஆகியவை போலி ஆவணங்களை தயாரித்து வடக்கு தாடு பகுதியில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் அண்மையில் விசாரணை முடிந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி பரத் பராசர் தீர்ப்பு வழங்கினார்.
குற்றவாளிகள்
அப்போது நீதிபதி, ‘‘ருங்தா சகோதரர்கள் மற்றும் ஜார்கண்ட் இஸ்பத் நிறுவனம் ஆகியவை மோசடி மற்றும் கிரிமினல் சதியில் ஈடுபட்டு குற்றம் புரிந்து உள்ளனர். எனவே ருங்தா சகோதரர்களும், இஸ்பத் நிறுவனமும் குற்றவாளிகள்’’ என்று தீர்ப்பு வழங்கினார்.
அதே நேரம், இதில் போலி ஆவணம் தயாரித்தது தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து ருங்தா சகோதரர்களையும், இஸ்பத் நிறுவனத்தையும் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
31–ந்தேதி தண்டனை
மோசடி மற்றும் கிரிமினல் சதியில் ஈடுபட்டதற்கான தண்டனை விவரத்தை வருகிற 31–ந்தேதி அறிவிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, இதுவரை ஜாமீனில் வெளியே இருந்த ருங்தா சகோதரர்கள் இருவரும் கோர்ட்டில் இருந்து சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு முதன் முதலாக தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.