Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2017

மனிதர்களுக்கு உதவும் பாம்பு ரோபோ !


அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் பாம்பு ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளனர். உயிரினங்களை பார்த்து ரோபோக்களை வடிவமைத்த விஞ்ஞானிகள் முதன் முதலாக மனிதனை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்தனர்.

அதன் பின்னர் சில வகையான மிருகங்களை அடிப்படையாகக் கொண்ட ரோபோக்களை உருவாக்கினர். தற்போது பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ வளரக்கூடியதாக இருப்பதுடன் வளைவு நெளிவுடன் உண்மையான பாம்பினை போன்று தோற்றமளிக்கும் அளவிற்கு மிக உண்மைத்தன்மையாக தயாரிக்கப்பட்டுள்ளது. 100 கிலோ நிறையுடைய இந்தப் பாம்பு ரோபோ, பேரழிவு அல்லது அவசர நேரத்தில் அதிகம் பயன்படும் என ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விபத்தின் போது ஒருவர் அறையினுள் மாட்டிகொண்டால் அவருக்கு சிறு குழாய் வழியாக தண்ணீர் கொடுக்க இந்த பாம்பு ரோபோ பயன்படும் எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த பாம்பு ரோபோ எதிர்காலத்தில் மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாம்பு ரோபோ மணிக்கு 35 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என்றும், காற்றின் மூலம் அழுத்தம் கொடுப்பதன் மூலம் ரோபோ வளரும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.