Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2017

அதிமுகவின் ஊழலுக்கும் முறைகேடுக்கும் தீர்வாக திமுக இருக்க முடியும்: கமல்ஹாசன்..... என்ன ஒரு கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் கமல் சார் ?


அதிமுகவின் ஊழலுக்கும், முறைகேடுக்கும் தீர்வாக திமுக இருக்க முடியும் என்று தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் நடிகர் கமல் தெரிவித்தார்.

கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்:- இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ரஜினிக்கு நிகரான நடிகர் நீங்கள் என்றால், இல்லவே இல்லை என்று நான் சொல்வேனா?. அல்லது கமலுக்கு நிகரான நடிகர் நீங்கள் என்றால், இல்லவே இல்லை என்று ரஜினி சொல்வாரா?, சொல்லப்போவதில்லை.

கேள்வி: நீங்கள் வேதனைப்படுகிற இந்த ஊழலுக்கும், இந்த முறைகேடுகளுக்குமான தீர்வாக தி.மு.க. இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: இருக்க முடியும். ஏன் அ.தி.மு.க.வாலேயே முடியும் என்று சொல்கிறேன். ஏன் தி.மு.க.வால் முடியாது. அந்த மாற்றத்தை அவர்கள் விரும்ப வேண்டாமா?

கேள்வி: தி.மு.க.வும், இதர கட்சிகளும் நல்லாட்சியை தர முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: முடியும். பண்ணலாம். இருக்க வைக்க வேண்டும். அது தான் நம்முடைய கடமை. ஊடகமாகிய அது உங்களுடைய கடமை. மக்களாக, கமல்ஹாசனாக என்னுடைய கடமை. திடீரென்று என்னுடைய வீரத்தை எங்கிருந்து பாராட்டுகிறார்கள். எப்போது வந்தால் என்ன?. அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கேள்வி: உங்களுடைய பலத்தை நாமே பரிசோதித்து பார்ப்போம் என்றோ, மற்றவர்களுக்கு காட்டுவோம் என்றோ ஒரு முயற்சியை நீங்கள் பண்ணியிருக்கிறீர்களா?

பதில்: பலத்தை அடித்து பிடித்து காட்டுவதற்கு வந்து மறுபடியும் காந்தியை சுடுவதுபோல் ஆகும்.

கேள்வி: அரசியலை ஒரு கை பார்த்துவிடுவது என்று கமல் முடிவு செய்துவிட்டாரா?

பதில்: அமைதியாக இருக்கக்கூடாது என்பது என்னுடைய கடமை.

கேள்வி: அப்படி என்றால் வாருங்கள் குரல் கொடுப்போம் என்பது கமல்ஹாசனின் ஒரு வரி தகவலா?

பதில்:- குரல் கொடுப்போம். அதாவது சாத்தியம் என்பது சொல் அல்ல. செயல்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.