Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2017

5 ஆண்டுகளில் 300 % உயர்ந்த பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா-வின் சொத்து மதிப்பு ?


பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா-வின் சொத்து மதிப்பு  கடந்த 5 ஆண்டுகளில் 300% உயர்ந்துள்ளது.

பாஜக-வின் தேசிய தலைவர் அமித்ஷா மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மனுவில், 2010-ல் ரூ.1.90 கோடியாக இருந்த அவரின் சொத்து மதிப்பு 2017-ல் 19 கோடியாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் அவரின் பரம்பரை சொத்தின் மதிப்பு ரூ.10.38 கோடி என குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா மற்றும் அவருடைய மனைவியின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2012 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2017 ஆம் ஆண்டில் 300% அதிகரித்துள்ளது. கடந்த 2012-ல் ரூ.8.54 கோடியாக இருந்த அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு தற்போது ரூ.34.31 கோடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல் , மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மனுவில் , 2014 -ல் ரூ.4.91 கோடியாக இருந்த அவரின் சொத்து மதிப்பு தற்போது ரூ.8.88 கோடியாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மிருதி இராணி 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 1994 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வி மூலம்  பி.காம் பகுதி -1 முடித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது  தாக்கல் செய்துள்ள மனுவில் , மூன்று ஆண்டு பட்டப் படிப்பை இன்னும் முடிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சொத்து உயர்வு அதுவாக வளர்ந்து வந்தது. அதில் எந்த ஊழலும் இல்லை என நீங்கள் நம்ப வேண்டும் என்று பாஜகவினர் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.