Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2017

கூவத்தூர் பாணியில் சொகுசு விடுதியில் பாதுகாப்பு: குஜராத்தில் குதிரைபேரத்தை தடுக்க காங்கிரஸ் நடவடிக்கை பெங்களூரில் 44 எம்எல்ஏக்கள் !


குஜராத் மாநிலங்களவை தேர்தலில் குதிரைபேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர், கூவத்தூர் பாணியில் பெங்களூர் சொகுசு  விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் 8ம் தேதிதான் குஜராத் அழைத்து வரப்படுவர் எனத் தெரிகிறது.

குஜராத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சங்கர் சிங் வகேலா, பாஜ.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தவர். கடந்த 2014ம் ஆண்டு  பிரதமராக மோடி பதவி ஏற்றபோது அவர் வாழ்த்தி பேசினார். அப்போதிருந்து அவரை காங்கிரஸ் மேலிடம் ஓரம்கட்டியது. இதனால் சங்கர் சிங்  வகேலாவும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருந்தனர். இதை கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிப்படுத்தினர். சில எம்.எல்.ஏ.க்கள் கட்சி  மாறி வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து, வகேலா சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆதரவாளர்களான காங்கிரஸ் கொறடா பல்வந்த்சிங் ராஜ்புத்,  எம்எல்ஏக்கள் தேஜஸ்பன் படேல், பிரகலாத் படேல் ஆகியோரும் காங்கிரசில் இருந்து விலகினர். அவர்கள் பாஜ தலைவர் அமித்ஷா முன்னிலையில்,  அக்கட்சியில் இணைந்தனர்.

குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி.க்கள் 3 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 18ம் தேதி முடிவதால், அந்த பதவிக்கு அடுத்த மாதம் 8ம் தேதி  தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பா.ஜ சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பா.ஜ தலைவர் அமித்ஷா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 இவர்கள் இருவரும் பா.ஜ எம்.எல்.ஏ.க்களின் பலத்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடுவர். காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, பா.ஜவில்  இணைந்த பல்வந்த் சிங் ராஜ்புத்தும் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இவருக்கு சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு  தேவை. இதற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் மூத்த  தலைவர் அகமது படேல் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் விலகினர். 24 மணி நேரத்தில் 6 எம்எல்ஏ.க்கள் விலகியதால், குஜராத்  காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டது. 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 57 லிருந்து 51 ஆக குறைந்துள்ளது. பா.ஜ  தனது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.