Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2017

கோவையில் 2 குழந்தைகள் பலி.. மக்கள் பீதி ! தமிழகத்தில் வேகமாகப் பரவும் டெங்கு !!


கோவை மாவட்டத்தில் 2 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

கேரளாவில் தென்மேற்குப்பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் கேரளாவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கேரளாவையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் மருத்துவமனைகளுக்கு மர்ம காய்ச்சல் என்று அட்மிட் ஆவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் 28 பேர் டெங்கு தாக்குதலுக்கு உள்ளாகி, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் வைரஸ் காய்ச்சல் என்ற பெயரில் 183 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு தனி வார்டில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே போல தனியார் மருத்துவமனைகளில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது கவலைக்குரியது.

கோவை வெள்ளமடை சாமிநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் 8 வயது மகள் தாரணி. சில நாட்களுக்கு முன்பு தரணிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிறுமி தாரணி சிகிச்சைக்காக அனுமதிதுள்ளனர். அங்கு பரிசோதனையில் தாரணிக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நேற்று கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த தாரணி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் ஆனைமலை சக்தி நகர் கிட்டுவின் 7 வயது மகள் மகாலட்சுமிக்கும் டெங்கு பாதிப்பு இருந்து வந்தது. இதையடுத்து அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் அங்கு மகாலட்சுமியின் உடல்நிலை மோசமானதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால், 9 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது டெங்குவால் 2 குழந்தைகளும் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 23 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே போல சேலம் அம்மாபேட்டையில் இளம்பெண் ஒருவரும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில், பொது மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.