Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 10, 2017

அதிவேக குடிநீர் சுத்திகரிப்பு தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு


மக்களின் குடிநீர் தேவையை ஈடு செய்வதற்காக அதிவேக சுத்திகரிப்பு நுட்பம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அழுக்குப் படிந்த நீரில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, அவற்றை சுத்தமான குடிநீராக்கும் பணிக்கு மிகச்சிறந்த வழி சூரிய சக்தியைப் பயன்படுத்துவதுதான். கண்ணாடி பாட்டிலில் நீரை வைத்து சூரிய ஒளியில் 8 முதல் 48 மணி நேரங்கள் தொடர்ந்து சூரிய ஒளி படும் வகையில் வைத்தால் ஏறத்தாழ அதிலுள்ள கிருமிகள் அழிக்கப்படும். ஆனால் நீண்ட நேரம் சூரிய ஒளி சரிவர கிடைக்காமல் போனால் இது சாத்தியமில்லை.

இதற்கு மாற்று வழியாக 20 நிமிடத்தில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, மாசு படிந்த நீரை குடிநீராக்கும் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஆற்றல் வளத்துறை மற்றும் ஸ்டேன்ட்போர்டு பல்கலைக்கழக குழுவினர் இணைந்து இந்த அற்புதத்தை நிகழ்த்தி உள்ளனர். இது 99.99 சதவீதம் பாக்டீரியாக்களை அழிப்பதாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

அற்புதம் செய்யும் இந்தக் கருவி, ஸ்டாம்ப் அளவே இருக்கிறது. இந்த சிறிய பட்டை வடிவ கருவியை தண்ணீர் உள்ள குடுவையின் மீது பொருத்த வேண்டியதுதான் வேலை. ஆனால் அந்தக் குடுவை மாலிப்டினம் டை சல்பைடு, நானோ துகள்களால் ஆக்கப்பட்டதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட வகையில் அடுக்கப்பட்டிருக்கும் இந்த நானோ அடுக்குகளுக்கு மெல்லிய தாமிர உறையும் கொடுக்கப்பட்டிருக்கும்.

சூரிய ஒளி படும்போது, மாலிப்டினம் டை சல்பைடும், தாமிரமும் வினைபட்டு ஹைட்ரஜன் பெராக்சைடையும், கிருமிகளை அழிக்கும் வேறுசில ரசாயனங்களையும் உருவாக்கும். அவை தண்ணீரின் மேல் படிவதால் நீரில் உள்ள கிருமிகள் கொல்லப்படுகின்றன. கிருமிகள் நீங்கியதும் அந்த ரசாயனங்கள் தானாகவே செயலிழந்துவிடும்.

சூரிய ஒளியின் இயற்கையான சுத்திகரிப்பு முறையைவிட பல மடங்கு வேகத்தில் இந்தக் கருவி செயல்படும். ஆனால் பாக்டீரியாக்களை மட்டுமே இந்த முறையில் அழித்து சுத்தமாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீரில் கலந்துள்ள வேறு ரசாயனங்களை இந்த முறையில் சுத்திகரிக்க முடியாது.

இருந்தாலும் நோய் பரப்பும் கிருமிகளை எளிதில் சுத்திகரிக் கும் நவீன முறையாக இது வளர்ச்சி பெறும் என்று நம்பப்படு கிறது. விரைவில் இந்த தொழில்நுட்பத்தில் செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் விற்பனைக்கு வந்துவிடும் என்று நம்பலாம்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.