Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 14, 2017

தோப்புக்கரணம் போடுங்க : வயாகரா எதுக்கு..? இளமையின் ரகசியம்..!


உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்.
கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம்.
வலது கை இடது காதையும், இடது கை வலது காதையும் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும்.
கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது
முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு  மேலும் இடலாம்.
உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும்.
இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள்.
ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும்.
சாதாரண தோப்புக் கரணத்தைப் போல் குறைந்தது 100 மடங்கு பலன் தரக் கூடியதே சித்தர்கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும்.
வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம். எல்லாத்தையும் விட காமப்பெருக்கி ஆசனம் என்று இந்த தோப்புக்கரணதிற்கு ஒரு பெயர் உண்டு.
தினமும் காலை,மாலை நூறு முதல் இரு நூறு வரை இதைச் செய்தால் நரம்புகள் முறுக்கேறும். விந்தணு கெட்டிப்படும். வயாகரா தரும் போலி ஊக்கம் தேவையே இல்லை.
பெண்கள், ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பலன் பெறலாம். சிறப்பாக கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக் கரணம் ஒரு வரப் பிரசாதமாகும்.
பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தை பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மன வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி.
அவ்வாறு பிரவத்திற்கு முன் இந்தத் தோப்புக் கரணம் போடாதவர்களும் பிரசவத்திற்குப் பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனைகள் குறையும்.
அப்புறம் என்ன..? ஆரம்பிங்க மக்காஸ்..!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.