Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

ஒரு அறையில் இரகசிய கேமரா உள்ளதென்பதை கண்டறிவது எப்படி ?


மிக எளிமையாக இரகசிய கேமரா கேமரா உள்ளதென்பதை கண்டறிவது எப்படி ?

பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் கழிப்பறைகள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள், உடை மாற்று அறைகள் போன்ற இடங்களில் வைக்கப்படிருக்கும் கண்ணாடிகள் மூலம் நாம் நம்மை மட்டுமே பார்க்க இயலும் என்று நினைத்தால் அது தவறு.நமக்கு தெரியாமலே எதிரில் இருந்து வேறொருவர் நம்மை பார்க்க வாய்ப்புள்ளது.அப்படி அவர் நம்மை பார்ப்பது நமக்கு தெரியாது.மாறாக நமக்கு நம் பிம்பம் மட்டுமே பிரதிபலிக்கப்படும்.சரி இதனை எப்படி கண்டறிவது?
எப்போதும் ஹோட்டல் அறைக்கு செல்லும்போது மிக கவனமாக இருத்தல்வேண்டும். இரகசிய கேமரா பொருத்தமாட்டில் பல சம்பவங்கள் நம் செய்திகளில் பார்க்கமுடியும். பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கேமரா தயாரித்து சிலர் தவரான காரியங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

செல்போன்:
அறைக்குள் நுழைவதற்கு முன் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்ய முடிகிறதா என்பதை உருதிப்படுத்திக்கொள்ளவும். பின்னர் அறைக்குள் சென்றவுடன் மீண்டும் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து பார்க்கவும் .பலமுறை முயற்சித்தும் உங்களால் கால் செய்ய முடியாவிட்டால் நிச்சயம் அங்கே ரகசிய கேமரா வைகப்பட்டிருகிறது.


கேமரா டிடெக்டர்:
நீங்கள் ஹோட்டல் அறையில் நுழையும்போது மிக கவனமாக கேமரா டிடெக்டர் பயன்படுத்தவும். கேமரா டிடெக்டர் ஆன்லைனில் மிக எளிமையாக வாங்கலாம்.

 கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்:
அறையில் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களை மிக கவனமாக பார்க்கவேண்டும். பொதுவாக இரகசிய கேமரா அதில்தான் மறைத்துவைக்கப்பட்டிருக்கும். அறையில் தகுந்த பாதுகாப்பு கேடயங்கங்களைப் பயனபடுத்த வேண்டும்.

 ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கண்டறிய
உண்மையில் சொல்லப்போனால் ஸ்மார்ட்போன்கள் அனுதினமும் சிறப்பான ஒரு கருவியாக மாறிக்கொண்டே வருகின்றன. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உதவி செய்யும் உங்கள் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு ட்ரையல் அறையில் ரகசிய கேமிரா இருக்கிறதா இல்லையா என்பதையும் கண்டறிய உதவும்.

கரடிகள்:
பொதுவாக ஹோட்டல் அறையில் உள்ள கரடிகரங்களில் கேமரா மறைத்துவைக்கப்பட்டிருக்கும். மேலும் புத்தகங்கள், மேசை செடிகள், வீட்டு தாவரங்கள் போன்றவற்றிலும் கூட மறைத்துவைக்கப்பட்டிருக்கும். எனவே கேமரா டிடெக்டர் பயன்படுத்துவது நல்லது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.