Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2017

ஃபேஸ்புக் லாபம் 76.6% உயர்வு


கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டு வர்த்தகச் செயல்பாடு விவரங்களை, ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட 76.6% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதேகாலத்தில் ஒட்டுமொத்த வருமானம் 8.03 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சியடைந்துள்ளது.

மேலும், விளம்பரங்கள் மூலமான வருமானம் 7.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தும் உள்ளது. இது ஒட்டுமொத்த வருமானத்தில் 85% பங்களிப்பை கொண்டுள்ளதாக, ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டின் முடிவில், விளம்பர வருமானம் 32 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சிபெறும் எனவும் மதிப்பீடு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 194 கோடியாக உள்ளது. விரைவில், இது 200 கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.