Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 10, 2017

இந்து மதம் குறித்த சர்ச்சை செய்தி – CNN தொலைக்காட்சிக்கு கடும் கண்டனம்!


அகோரிகளின் நரமாமிசம் உண்ணும் காட்சிகளை ஒளிபரப்பிய அமெரிக்க சேனலான CNN தொலைக்காட்சியின், ‘பிலீவர்’ நிகழ்ச்சி, அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
கடந்த ஞாயிறு முதல் CNN தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய நிகழ்ச்சி ‘பிலீவர்’. ஆன்மிக அறிஞர் ரெஸா ஆஸ்லான் இதை தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட் வாரணாசியில் படம்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக தயார் செய்யப்பட்டிருந்த ப்ரோமோவில், வாரணாசியை ‘இறந்தவர்களின் நகரம்’ என்று விவரித்தது முதலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், ஒளிபரப்பான முழு நிகழ்ச்சியில் அகோரிகள் நரமாமிசம் உண்ணும் காட்சிகள் உட்பட பல காட்சிகள் எடிட் செய்யப்படாமல் அப்படியே ஒளிபரப்பப்பட்டது.
‘அமெரிக்கா அச்சம் சூழ்ந்த ஒரு நிலையில் இருக்கும் இந்த நேரத்தில், இப்படி ஒரு நிகழ்ச்சியை வெளியிடுவது தவறு’ என்று ஊடக நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் ஷலாப் குமார், ‘இந்துக்கள் மீதான அருவெறுக்கத்தக்க தாக்குதல் இது’ என, ட்விட்டரில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து ரெஸா ஆஸ்லான் மீதும், CNN குழுமம் மீதும் பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு நாடு முழுவதும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Topics – Tamilnadu

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.