பொற்கொல்லர் ஒருவர் தங்கத்தை உருக்கிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் அவரது உதவியாளர் பொற்கொல்லரை அழைத்தார்.
"குருவே! தங்களைச் சந்திக்க ஜமீன்தார் வீட்டில் இருந்து ஆட்கள் வந்துள்ளனர். வெளியே காத்துக் கொண்டிருக்கின்றனர்,'' என்றார்.
உடனே எழுந்த பொற்கொல்லர், தன் உதவியாளரிடம் தங்கத்தை உருக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, ஜமீன்தார் வீட்டு ஆட்களைக் காணச் சென்றார்.
உதவியாளரோ தங்கத்தை உருக்கிக் கொண்டிருந்தார். தீயில் உருகிக் கொண்டிருக்கும் தங்கத்தைப் பார்த்து பொற்கொல்லரின் உதவியாளரின் மனதில் அதில் சிறிதளவு எடுத்துக் கொண்டால் என்ன என்ற ஆர்வம் ஏற்பட்டது.
"நம் குருநாதர் ஜமீன்தார் வீட்டு ஆட்களிடம் பேசி விட்டு வருவதற்கு நேரமாகலாம். அதற்குள் நாம் உருக்கிக் கொண்டிருக்கும் தங்கத்தில் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டியது தான்' என முடிவு செய்தார்.
யாருக்கும் தெரியாமல் உருக்கும் தங்கத்தில் இருந்து சிறிதளவு எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் பொற்கொல்லர் வந்தார். தன் உதவியாளரை நோக்கிய அவர், "நான் கூறியபடி தங்கத்தை உருக்கி விட்டாயா?'' என்று கேட்டார்.
"ஆமாம் குருவே உருக்கி விட்டேன். அதோ தயார் நிலையில் இருக்கின்றன,'' என்று உருக்கிய தங்கத்தைக் காட்டினார் உதவியாளர்.
"சரி... நீ மற்ற வேலைகளை கவனிக்கச் செல்!'' என்று உதவியாளரை அனுப்பிவிட்டு, தங்கத்தை எடை போட்டார் பொற்கொல்லர்.
எடை வித்தியாசப்படுவதை உணர்ந்த பொற்கொல்லர் இது நம் உதவியாளரின் கைவரிசையாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டார்.
"நம் உதவியாளரிடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. ஆனால், அவர் கையில் இருப்பதோ திருட்டு வேலை. அவரை நாம் தான் எப்படியாவது திருத்தி நல்வழிக்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அவரது எதிர்காலமானது சீராகும்' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் பொற்கொல்லர்.
ஒருநாள், தன் உதவியாளரை அழைத்தார் பொற்கொல்லர்.
"நீ ரொம்ப நாட்களாக என்னோடு வேலை செய்து கொண்டிருக்கிறாய். அதிலும் திறமைசாலியாகயிருக்கிறாய். எனவே, ஜமீன்தார் வீட்டு நகைகளை செய்யும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன். ஜமீன்தார் வீட்டிலிருந்து அதற்காக கொடுக்கப்படும் பணத்தையெல்லாம் நீயே எடுத்துக் கொள்ளலாம். உன்னையும் ஓர் முதலாளியாக ஆக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இன்றிலிருந்து அதற்கு நீ தயாராக இருந்து கொள்,'' என்றார்.
இதனைக் கேட்ட உதவியாளர் திடுக் கிட்டார். வெட்கத்தால் தலை குனிந்தார். அவர் மனசாட்சியானது அவரையே துன்புறுத்தியது. தன் குருநாதர் காலில் விழுந்து தான் உருக்கிய தங்கத்தை திருடியதைத் தெரியப்படுத்தி, "இவ்வேலை செய்ய நான் அருகதையில்லாதவன்,'' என்று கண்ணீர் வடித்தார்.
"இதோ பார்! நீ செய்யும் திருட்டினால் உன் திறமை அழிந்துவிடும். நீ திருந்துவாய்; உன் திறமையை மதிப்பாய் என்ற நல்லெண்ணத்தில் தான் இந்தப் பொறுப்பினை உன்னிடம் ஒப்படைக்க முன் வந்தேன்,'' என்றார்.
குருநாதர் கொடுத்த வேலையை திருப்தியாகச் செய்து முடித்து தனது திறமையை நிரூபித்தார் உதவியாளர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.