Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 29, 2016

போலீஸ் பாதுகாப்புடன் ஒடிசாவுக்கு சேலத்தில் இருந்து 2 ஆயிரம் கோடி கடத்தல்?


சேலத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் 2 ஆயிரம் கோடி வரை ஒடிசாவுக்கு கடத்தப்பட்டதாகவும், பின் அந்த பணம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்தப் பணம் முழுவதும் மேற்கு மண்டலத்தில் உள்ள ஒரு செல்வாக்கான அமைச்சருக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மூத்த அமைச்சர்கள் சிலர் சீட்டு வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் பணம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து ஐவர் அணியைச் சேர்ந்த அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா கண்காணிக்க உத்தரவிட்டார். அதில் 3 மூத்த அமைச்சர்களை ஜெயலலிதா ஓரங்கட்டி வைத்திருந்தார். அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய 2 அமைச்சர்களுக்கு மட்டும் மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனாலும் மாநிலம் முழுவதும் அமைச்சர்களின் சொத்து விவரங்களை உளவுத்துறையினரும், கட்சியில் உள்ள முன்னாள் போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட தனிக் குழுவினரும் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

அதில் சில அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் பினாமிகள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் முக்கிய ஆணவங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதில் ஜெயலலிதாவுக்கும், இளவரசிக்கும் நெருக்கமான ஒரு மூத்த அமைச்சர் மேற்கு மண்டலத்தில் உள்ளார். ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டபோது போயஸ்கார்டனின் செலவு விவகாரங்கள் இந்த மூத்த அமைச்சரிடம்தான் ஒப்படைக்கப்பட்டன. இதனால் மேற்கு மண்டலத்தில் இவர் செல்வாக்கு பெறத் தொடங்கினார். மூத்த அமைச்சர்களாக இருந்த செங்கோட்டையன், செம்மலை ஆகியோரை கட்சியில் மேலும் வளர விடாமல் அவர் செய்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனாலும், அவர் செல்வாக்காக இருந்ததால், மேற்கு மண்டலத்தில் அவர் கை காட்டும் நபர்களுக்கே சீட் கொடுக்கப்படும் என்ற நிலைதான் தற்போது கட்சியில் உள்ளது. இவ்வளவு செல்வாக்காக இருந்தாலும், அமைச்சர் மிகவும் உஷாரானவர். சமீபத்தில் நாமக்கல், பொள்ளாச்சி சாலையில் உள்ள தோப்பில் மண் தோண்டி பிளாஸ்டிக் கவரில் பேக் செய்யப்பட்டு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு தோப்பு முழுவதும் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் ஈடுபட்ட கூலி தொழிலாளிகள் தோப்பிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் விடுமுறையில் கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த பண்ணை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தலைமை அடிக்கடி பலரது வீடுகளில் சோதனை நடத்துவது தெரிந்ததும், போலீஸ் உதவியுடன் கொஞ்சம், கொஞ்சமாக சுமார் ₹2 ஆயிரம் கோடி வரை பணத்தை, சேலம் கொண்டு வந்து பின்னர், ஒடிசாவுக்கு கடத்தப்பட்டது. ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சுரங்கம் தோண்டும் பணிகள் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அவருக்குச் சொந்தமாக ஒரு சொகுசு விமானம், 3 ஹெலிகாப்டர்கள் உள்ளன. அவர் ஏற்கனவே முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறது. அவருக்கும், அமைச்சருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உறவினர்கள்தான். இதனால் அமைச்சரின் பணம் முழுவதும் ஒடிசா கொண்டு செல்லப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், அந்தப் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது மத்திய உளவு மற்றும் பல்வேறு விசாரணை பிரிவுகளுக்குத் தெரியவந்தள்ளது. அவர்கள் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் விரைவில் எதிரொலிக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.