முன்னொரு காலத்தில் அழகிய பெரும் சிங்காரவனம் என்ற காட்டில் சிங்கம் அரசனாக இருந்தது. கரடி, குரங்கு, நரி மூன்றும் அதற்கு உதவியாளர்களாக இருந்தன.
அந்தச் சிங்கம் ரொம்ப கெட்ட சிங்கம். யாருக்குத் தண்டனை வழங்கினாலும் அதை முறையாக வழங்குவது போல நடித்தது. அதன் சூழ்ச்சியை உதவியாளர்கள் அறியவில்லை.
ஆண்டுகள் பல சென்றன-
முதுமை அடைந்த சிங்கத்தால் முன்பு போல வேட்டையாட முடியவில்லை. அதற்கு வயிறார உணவும் கிடைக்கவில்லை. பசியால் வாடியது. வேறு வழி இல்லை. உதவியாளர்களைக் கொன்று தின்ன வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தது. என்ன காரணம் காட்டி அவற்றைக் கொல்வது என்று சிந்தித்தது சிங்கம்.
நல்லவழி ஒன்று அதற்குத் தோன்றியது.
கரடியை அழைத்து, "என் வாயிலிருந்து எப்படிப்பட்ட மணம் வீசுகிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். நான் வாயை நன்றாகத் திறக்கிறேன். உன் மூக்கை என் வாயின் அருகே வைத்து முகர்ந்து பார். என்ன மணம் வீசுகிறது சொல்,'' என்று இனிமையாகச் சொன்னது.
சிங்கத்தின் சூழ்ச்சியை அறியவில்லை கரடி.
அதன் திறந்த வாயின் அருகே தன் முகத்தைக் கொண்டு சென்றது கரடி. மூச்சை இழுத்து முகர்ந்து பார்த்தது.
பச்சை இறைச்சியை அப்படியே சாப்பிடும் சிங்கம் ஆயிற்றே. அதன் வாயிலிருந்து கெட்ட நாற்றம் வீசியது. நாற்றம் தாங்க முடியாத கரடி தன் முகத்தை திருப்பிக் கொண்டது.
"அரசே! உங்கள் வாயிலிருந்து கெட்ட நாற்றம் வீசுகிறது. என்னால் தாங்க முடியவில்லை,'' என்று உண்மையைச் சொன்னது.
இதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டது போல நடித்தது.
"எல்லாரும் புகழும் அரசன் நான். என் வாயிலிருந்து கெட்ட நாற்றம் வீசுகிறது என்றா சொல்கிறாய்? என்னையே குறைகூறும் துணிவு உனக்கு வந்து விட்டதா? உன்னை என்ன செய்கிறேன் பார்,'' என்று கர்ச்சனை செய்தது.
"என்ன நிகழப் போகிறதோ? உண்மையை பேசி ஆபத்தில் சிக்கிக் கொண்டேனே' என்று நடுங்கியது கரடி.
அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அதன் மீது பாய்ந்தது சிங்கம். ஒரு நொடிக்குள் அதைக் கொன்று வீழ்த்தியது.
இதைப் பார்த்து குரங்கும், நரியும் நடுங்கின.
அடுத்ததாகக் குரங்கை அழைத்தது சிங்கம்.
"என் வாயிலிருந்து என்ன மணம் வீசுகிறது? நீ முகர்ந்து பார்த்து சரியாகச் சொல்,'' என்றது.
கரடிக்கு நிகழ்ந்த கொடுமையை நினைத்து நடுங்கிய படியே சிங்கத்தின் அருகே சென்றது குரங்கு.
சிங்கம் தன் வாயை நன்றாகத் திறந்து காட்டியது.
அதன் வாயை முகர்ந்து பார்த்தது குரங்கு. கெட்ட நாற்றம் தாங்க முடியாமல் தவித்தது.
"உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காகப் பொய் சொல்லலாம் தவறில்லை' என்று நினைத்தது குரங்கு.
"அரசே! உங்கள் வாயிலிருந்து இனிய மணம் வீசுகிறது. இப்படிப்பட்ட நறுமணத்தை நான் இதுவரை நுகர்ந்ததே இல்லை. ஆ! என்ன இனிய மணம்!'' என்று அளந்தது.
"ஏ! குரங்கே! நான் பச்சை இறைச்சியைச் சாப்பிடுகிறேன்; ரத்தத்தை அப்படியே குடிக்கிறேன்; பல் துலக்குவதும் இல்லை; முகம் கழுவுவதும் இல்லை.
"இப்படிப்பட்ட என் வாயிலிருந்து எப்படி இனிய மணம் வீச முடியும்? கெட்ட நாற்றம் அல்லவா வீச வேண்டும்.
"அரசனாகிய என்னிடமே பொய் சொல்கிறாயா? பொய் சொன்னதற்கு என்ன தண்டனை என்பது உனக்குத் தெரியாதா? உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்,'' என்று கோபத்துடன் குரங்கை கொன்று தீர்த்தது.
இதைப் பார்த்த நரி நடுங்கியபடியே அங்கே இருந்தது.
நான் உண்மையைச் சொன்னாலும் அந்த சிங்கம் என்னை கொல்லப் போகிறது. பொய் சொன்னாலும் இதனிடம் இருந்து தப்பிக்க முடியாது. என்ன செய்வது? இதனிடமிருந்து தப்பிக்க ஏதேனும் வழி உண்டா? என்று சிந்தித்தபடியே இருந்தது.
அடுத்து நரியையும் கொல்ல வேண்டும் என்று நினைத்த சிங்கம், ""நரியே! நீ என் வாயை முகர்ந்து பார். என்ன மணம் வீசுகிறது? சொல்,'' என்று கட்டளையிட்டது.
அறிவு நிறைந்த நரி தும்மல் போட்டபடியே சிங்கத்தின் அருகே சென்றது.
திறந்திருந்த சிங்கத்தின் வாயை முகர்ந்து பார்த்தது நரி.
அடுக்கடுக்காகத் தும்மல் போட்டபடியே சிங்கத்திடம் ஏதோ சொன்னது. அதைக் கேட்ட சிங்கம் குழப்பம் அடைந்தது. எந்தக் காரணமும் காட்டி அதனால் நரியைக் கொல்ல முடியவில்லை.
புதிருக்கான விடை: அரசே! கடுமையான ஜலதோஷம் காரணமாக எனக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு உள்ளது. உங்கள் வாயிலிருந்து என்ன மணம் வீசுகிறது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு நாள் தவணை தாருங்கள். மருத்துவரிடம் சென்று என் நோயைக் குணப்படுத்திக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது நரி. எப்படி சூப்பரா!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.