Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2017

ரெயில்வே வாரியம் அறிவுரை: பயணிகள் வீட்டில் இருந்தே உணவை எடுத்து வந்துவிடுங்கள் !


ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் இந்திய ரெயில்வே தரப்பில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் மனிதர்கள் சாப்பிட பொறுத்தமற்றவை என சமீபத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்தது. இதனை உறுதிசெய்யும் வகையில் சமீபத்தில் ஹவுராவில் இருந்து டெல்லியை நோக்கி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த பயணிக்கு வழங்கப்பட்ட வெஜிடேபிள் பிரியாணியில் பல்லி கிடைந்தது.

இவ்விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில்வேயில் வழங்கப்படும் உணவு வகைகள் தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துவரும் நிலையில் பயணிகள் வீட்டில் இருந்தே உணவை எடுத்துக் கொண்டு வந்துவிடலாம் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

 “வீட்டில் இருந்தே பயணிகள் உணவை தயார் செய்து எடுத்து வந்துவிடலாம், வீட்டு உணவிற்கு மாறான தரமான உணவு கிடையாது,” என கூறிஉள்ளார் ரெயில்வே வாரிய சேர்மன் ஏகே மித்தால்.

 வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தில் ஒப்பந்தக்காரர்களால் சமரசம் செய்துக் கொள்ளப்படுவதால் பயணிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு நாளும் சுமார் 15 லட்சம் பேர் ரெயிலில் பயணம் செய்கிறார்கள், ரெயில்வே மிகவும் தீவிரமான சவாலை எதிர்க்கொண்டு உள்ளது. இப்பிரச்சனைகளை சரிசெய்வதற்கான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது.  ரெயில்வே சொந்தமான சமையல் அறைகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்கிறது, ஒரு வருடத்திற்குள் இது செயல்பாட்டிற்கு வரும்.

இ-கேட்ரிங் மீதும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, இ-கேட்ரிங் மூலம் பயணிகள் உணவுப்பொருட்களை ஆர்டர் செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என கூறிஉள்ளார் ஏ.கே. மித்தால்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.