Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2017

கதிராமங்கலத்தில் 71ஆவது நாளாகத் தொடரும் அறப் போராட்டம் ! எப்ப விடிவு ?


கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து 71-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணியைச் செய்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும், நிலத்தடி நீர் நாசமடையும் எனக் கூறி, ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், சில வாரங்களுக்கு முன்பு கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாததால் சிறையில் தவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டும் கைது செய்யப்பட்ட 10 பேரும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்நிலையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 5 பேர் நேற்று மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மக்கள் போராட்டம் 71ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும் இதற்கான தீர்வை மத்திய, மாநில அரசுகள் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கதிராமங்கலத்தில் குறுவை சாகுபடிக்கான விவசாய வேலைகள் நடைபெற வேண்டிய சூழலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் அவர்களின் நிலைமை இன்னமும் மோசமடையும் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.