July 17, 2017
கதிராமங்கலம், நெடுவாசலுக்கு போராடியதால் நடவடிக்கை: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேர் சஸ்பென்ட் ?
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் 15 நாள்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேரை கல்லூரி நிர்வாகம் இன்று திடீரென 15 நாள்களுக்கு சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டது. இவர்கள் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டதால் சஸ்பென்ட் செய்ததாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் மாணவர்களோ தாங்கள் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.
அண்மையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீதும் மாணவர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர். அப்போது முதல்வரின் மண்டை உடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கதிராமங்கலம், நெடுவாசலுக்கு போராடியதால் நடவடிக்கை: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேர் சஸ்பென்ட் ?
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.