June 14, 2017
சசிகலா புஷ்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை..!
வீட்டில் பணிபுரிந்த பெண்கள் புகார் அளித்த வழக்கில், சசிகலா புஷ்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கட்சிக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டப்பட்ட எம்பி., சசிகலா புஷ்பாவை அ.தி.மு.க-விலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். இதையடுத்து, சசிகலா புஷ்பா மீது, அவர் வீட்டில் பணிபுரிந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, திசையன்விளை காவல்நிலையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆள் கடத்தல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. காவல்துறையினரின் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, சசிகலா புஷ்பா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்தார். அந்த வழக்கில், நீதிபதி நிஷாபானு, சசிகலா புஷ்பா உள்ளிட்ட மூன்று பேருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சசிகலா புஷ்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.