June 21, 2017
1000 லைக்குகள் வேண்டும்: உயரமான கட்டிடத்தில் குழந்தையை தொங்கவிட்ட கொடூர தந்தை
1000 லைக்குகள் வேண்டும்: உயரமான கட்டிடத்தில் குழந்தையை தொங்கவிட்ட கொடூர தந்தை
அல்ஜீரியாவில் தந்தை ஒருவர் தனக்கு 1000 லைக்குகள் வேண்டு என்பதற்காக தனது குழந்தையை உயரமான கட்டிடத்தில் இருந்து போடுவதற்கு துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையை ஒருவர், 15 வது மாடியின் ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்க விடுவது போன்ற புகைப்படத்தை தாங்கிய பதிவை ''1000 லைக்குகள் வேண்டும், இல்லையெனில் குழந்தையை வெளியே விட்டுவிடுவேன்'' என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை வெளியிட்டார்.
இதனை பார்த்த சமூகவலைதளவாசிகள் குழந்தையை இப்படி துஷ்பிரேயோகம் செய்கிறார் என கொந்தளித்துள்ளனர். மேலும் இவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த தகவல் பொலிசாரிக்கு தெரியவந்ததையடுத்து, இந்நபர் மீது குழந்தையின் பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் 15-ஆவது மாடியில் இருந்து, தனது குழந்தையை பெயர் குறிப்பிடப்படாத இந்நபர் தொங்கவிட்டதாக அல் அராபியா செய்திவலைத்தளம் தெரிவித்துள்ளது.
1000 லைக்குகள் வேண்டும்: உயரமான கட்டிடத்தில் குழந்தையை தொங்கவிட்ட கொடூர தந்தை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.