Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2017

ஃபேஸ்புக்கில் பகீர் போஸ்ட் போட்டுவிட்டு பட தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை


 மராத்தி பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மராத்தி பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர். அவர் தயாரித்த தோல் தாஷே கடந்த 2013ம் ஆண்டு வெளியானது. படத்தின் கதையை பலர் பாராட்டியபோதும் படம் ஓடவில்லை.

இதனால் தப்கிருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

சண்டை
படத்தால் நஷ்டம் அடைந்ததால் தப்கிருக்கும், அவரது மனைவி பிரியங்காவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. பண நெருக்கடியால் மன நிம்மதி இல்லாமல் இருந்து வந்தார் தப்கிர்.

 தற்கொலை
புனேவில் உள்ள பிரசிடென்ட் ஹோட்டலுக்கு சென்ற தப்கிர் அங்கு அறை எடுத்து தங்கியுள்ளார். ஹோட்டல் அறையில் அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 ஃபேஸ்புக்
தற்கொலை செய்யும் முன்பு தப்கிர் ஃபேஸ்புக்கில் தனது முடிவுக்கான காரணத்தை விரிவாக தெரிவித்துள்ளார். அன்னையர் தினத்தன்று இறந்த தனது தாயிடம் போவதாக அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

 மனைவி
பண பிரச்சனையால் எனக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டார். மேலும் என்னை பற்றி வதந்திகளையும் பரப்பினார் என்று தப்கிர் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

 குழந்தைகள்
என் மனைவி என் மீது பொய் புகார்கள் தெரிவித்தார். எங்களின் 2 குழந்தைகளையும் பார்க்கவே விடவில்லை. மேலும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள கொடுத்த பணத்தை வைத்து கார் வாங்கிவிட்டு எப்பொழுது பார்த்தாலும் பணம் கேட்கிறார். பண பிரச்சனை, குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்கிறேன் என தப்கிர் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.