May 3, 2017
மானாமதுரையில் பரபரப்பு.. பெண் இன்ஸ்பெக்டர் தூக்குப் போட்டுத் தற்கொலை... மேல் அதிகாரிகளின் டார்ச்சரா?
மானாமதுரையில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெண் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையில் பணியில் இருக்கும் பெண் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. உயரதிகாரிகள் டார்ச்சர், காதல் பிரச்சினை, பணியில் மன உளைச்சல் என பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண் காவலர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ராமு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காதல் பிரச்சினை என்பது தெரியவந்தது.
திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்மமான முறையில் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் பற்றிய விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதச்செல்வி தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட அமுதச்செல்வியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் அமுதசெல்விக்கு 38 வயதாகிறது அவருக்கு ராஜபாண்டி என்ற கணவரும், 7 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. பணியில் டார்ச்சரா? வேறு எதுவும் பிரச்சினையா என உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மானாமதுரையில் பரபரப்பு.. பெண் இன்ஸ்பெக்டர் தூக்குப் போட்டுத் தற்கொலை... மேல் அதிகாரிகளின் டார்ச்சரா?
Reviewed by மறத்தமிழன்
on
May 03, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 03, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.