Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2017

பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு... நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!


பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிவு முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.39 காசுகளும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.04 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள மாற்றியமைத்து வருகின்றன. 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 39 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 4 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது.

ஏப்ரல் ஒன்றாம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 85 காசுகளும் டீசல் விலை 3 ரூபாய் 41 காசுகளும் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த நடைமுறை முதற்கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், ஆந்திரா, உதய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் செயல்பாட்டுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த நடைமுறை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.