February 21, 2017
தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே ,சிபிசிஐடி அறிக்கை – அதிகார வர்கத்தின் கை ஓங்கியதா?
தருமபுரியை சேர்ந்த இளவரசன் மரணம் தற்கொலை என்று சிபிசிஐடி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து வழக்கை முடித்து வைத்தது.
இளவரசன், கடந்த 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். தலித் சமூதாயத்தை சேர்ந்த இளவரசன், கடந்த 2012 ஆம் ஆண்டு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கலப்பு திருமணம் செய்துகொண்டதால், திவ்யா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனைதொடர்ந்து, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், திவ்யா தனது தாயுடன் சென்றார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட இளவரசன் கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜுலை 4ஆம் தேதி, ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததார்.
இது கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரிக்க வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதில் இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக சிபிசிஐடி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
சிபிசிஐடியின் இந்த அறிக்கையை ஏற்று, உயர்ந்தீமன்றம் இளவரசன் மரணம் தற்கொலையே என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே ,சிபிசிஐடி அறிக்கை – அதிகார வர்கத்தின் கை ஓங்கியதா?
Reviewed by மறத்தமிழன்
on
February 21, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.