February 28, 2017
ஜெ.,மரணம் சி.பி.ஐ.,விசாரணை!? பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள் டில்லியில் முகாம்!
பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் 12 எம்.பி.,க்கள் இன்று டில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ.,விசாரணை நடத்திய உண்மையை வெளியே கொண்டு வரவேண்டும் என கேட்கவுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செப்.,22ம் தேதி, திடீர் என உடல் நிலை குறைவு என கூறி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் சாதாரண காய்சல் என கூறிய மருத்துவமனை நிர்வாகம் பின்னர் நீர்சத்து குறைவு, தொற்று நோய் என முன்னுக்கு பின் முரனான தகவல்களை வெளியிட்டு வந்தது.
ஜெ.,சிகிச்சையின் போது சசிகலாவை தவிர வேறு யாரும் ஜெ.,வை நேரில் பார்க்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி ஜெ.,மரணம் அடைந்தார் என்ற தகவல் வெளியானது.
பல்வேறு மர்மங்கள் எழுந்துள்ள ஜெ.,மரணம் குறித்து ஆரம்பத்தில் இருந்தே தமிழக மக்கள், எதிர்கட்சி உட்பட பல கட்சி தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க.,வின் உண்மை தொண்டர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதையாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் சசிகலாவில் ஆதிக்கம் பிடிக்காமல் அவரை எதிர்த்து அரசியல் செய்து வரும் பன்னீர் செல்வத்திற்கு 12 எம்.எம்.பி.,கள் 10 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்நிலையில், இன்று பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள் டில்லி சென்றுள்ளனர். அவர்கள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை சந்திக்கின்றனர். ஜெ.,மரணம் குறித்து சி.பி.ஐ.,விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தவுள்ளனர்.
இவர்கள் கோரிக்கே ஏற்று சி.பி.ஐ.,விசாரணை நடத்த அதிக அளவில் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. விரைவில் ஜெ.,மரணம் குறித்த மர்மம் முடிச்சுகள் அவிழும் என தெரிகிறது.
ஜெ.,மரணம் சி.பி.ஐ.,விசாரணை!? பன்னீர் ஆதரவு எம்.பி.,க்கள் டில்லியில் முகாம்!
Reviewed by மறத்தமிழன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.