February 4, 2017
கடல் சுத்தப்படுத்த நவீன கருவிகள் பயன்படுத்த முடியாது: மனித சக்தி மட்டுமே முடியும் – பொன் ராதாகிருஷ்ணன்
எண்ணூர் துறைமுகம் அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில், டன் கணக்கில் எண்ணை படலம் கடலில் கலந்து, கடலில் உயிர் வாழ்ந்த அரிய வகை உயிர் இனங்கள் செத்து மிதந்தது.
அந்த எண்ணை படலம், சென்னையை சுற்றியுள்ள 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்து வருகிறது. அந்த எண்ணை படலத்தை அகற்ற ஆயிரகணக்கானோர் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் கடற்கரையில், எண்ணை படலம் அகற்றும் பணியை பார்வையிட்ட மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன் கூறுகையில், எண்ணை படலம் முழுவதும் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. கடல் பகுதியில் படலம் இருந்தால் நவீன கருவிகள் மூலம் அகற்ற முடியும்.
கரை ஒதுங்கியுள்ளதால் மனித சக்திகள் தான் அகற்ற முடியும். பல வழிகளில், பலதுறையினர் மத்திய மாநில அரசு மற்றும் தன்ஆர்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர். கடல் நீரிலுள்ள படலங்கள் ஒரு சில நாட்களில் அகற்றப்படும்.
பாறை இடுக்குகளில் படிந்துள்ள எண்ணை படலங்களை முழுமையாக அகற்ற முடியாது, என்றார்.
கடல் சுத்தப்படுத்த நவீன கருவிகள் பயன்படுத்த முடியாது: மனித சக்தி மட்டுமே முடியும் – பொன் ராதாகிருஷ்ணன்
Reviewed by மறத்தமிழன்
on
February 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.