Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 20, 2017

‘பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு 25 கோடி’’ சசி குரூப் அதிரடி!


முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சில எம்எல்ஏக்களும், எம்பிகளும், கட்சியில் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றனர். இதனால் சசிகலா தரப்பினர் அதிர்ச்சிடைந்தனர்.

இதற்கிடையே டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தையும் சமாதானப்படுத்தி கட்சிக்கு திரும்ப அழைக்கலாம் என்ற கருத்தை சசிகலாவிடம் முன் வைத்திருக்கிறார். ஆனால் சசிகலா இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் இதையும் மீறி டிடிவி தினகரன் ஓ. பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு சமாதானம் பேசியிருக்கிறார். அப்போது ஓ.பிஎஸ்., ‘தனக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தால் கட்சிக்குத் திரும்ப தயார்” என்ற கோரிக்கையை முன் வைத்ததாகத் தெரிகிறது.

ஆனால் இதற்கு சசிகலா உடன்படவில்லை என்ற நிலையில் அந்த பேச்சுவார்த்தை முறிந்துள்ளது. இந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அவர் சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்து ஆட்சியமைக்க உரிமை கோர வைத்தார் சசிகலா.

சசிகலா ஜெயிலுக்கு புறப்படும் முன் கூவத்தூர் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார். நான் யாரை மன்னித்தாலும் மன்னிப்பேன் கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வத்தை மன்னிக்கமாட்டேன். அவரை தனிமைப்படுத்த வேண்டும்” என்றும் ஆதரவாளர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிச்சாமி வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் எம்.எல். ஏக்களை மீண்டும் அ.தி.மு.கவுக்கு அழைக்க அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

காரணம், சிறையிலிருந்து தினகரனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சசிகலா, “ஓ.பன்னீர்செல்வத்தை தவிர கட்சியைவிட்டு பிரிந்து சென்ற அனைவரையும் எப்படியாவது கட்சிக்கு கொண்டு வர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

எனவே சசிகலாவின் ஆர்டரின் பேரில் கட்சியை ஒன்றிணைக்கும் பணியில் தினகரன் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டு வருவுதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.