Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 12, 2017

'தமிழனுக்கு பிறந்தவன் அப்படிதான் பேசுவான்!' - டி. ராஜேந்தர் அதிரடி


ஜல்லிக்கட்டு தொடர்பாக நடிகர் சிம்பு செய்தியாளர்களைச் சந்தித்து முடித்ததும், அவரது தந்தை டி. ராஜேந்தரும் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

'தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் நிற்பது நானே. அனைத்து பிரச்னைகளுக்கும் எதிர்த்து குரல் கொடுத்து நான்தான். அதனால் என் மகனும் பேசுகிறான். தமிழனுக்கு பிறந்தவன் அப்படிதான் பேசுவான். நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிடினும் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பேன்' என ஆவேசமாக பேசினார்.

'ஜல்லிக்கட்டு மிருகவதை என்பது வெறும் கதைதான். ஆடு, மாடு, கோழியை கொன்று சாப்பிடுவது மிருக வதை இல்லையா? ஜல்லிக்கட்டை அழிக்க வெளிநாட்டினர்கள் சதி செய்கிறார்கள்.  நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிடினும் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பேன். ஜல்லிக்கட்டுக்கு உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கருப்புக் கொடி ஏற்றுங்கள். கட்சி சார்பில்லாமல் அனைவரும் ஜல்லிக்கட்டுக்காக போராட வேண்டும்' என பேசினார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.