முதலமைச்சர் பன்னீர்செல்வம் குறித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது கார்டன். 'தீபாவின் அரசியல் பிரவேசமும் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நீடிப்பதையும் மன்னார்குடி உறவுகள் ரசிக்கவில்லை' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அன்றாட அரசுப் பணிகளைக் கவனிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். புத்தாண்டுக்கு பிரதமருக்கு வாழ்த்துச் சொல்வதில் ஆரம்பித்து, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்தது, பா.ஜ.க தலைவர் தமிழிசைக்கு நேரம் ஒதுக்கியது என உற்சாகத்தோடு வலம் வருகிறார். நேற்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தி, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன். தி.மு.க சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில் உள்ள நியாயத்தை முதலமைச்சர் உணர்ந்திருந்தாலும், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத ஏதோ ஒரு நெருக்கடியில் இருக்கிறார் என்பதை அந்த சந்திப்பில் உணர முடிந்தது. அதிகாரத்தைத் திரைமறைவில் இருந்து வழி நடத்துபவர்களின் அலட்சியத்தால், நாட்டின் அச்சாணியாகத் திகழும் விவசாயிகளின் வாழ்வு பாழாகிவிடக் கூடாது' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
"தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்திக்க ஸ்டாலின் சென்றபோதும், என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்க சிலரை கார்டன் நியமித்துள்ளது. அவர்கள் மூலமாக கோட்டைக்குள் நடக்கும் விவரங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. தன்னிச்சையாக அவர் எந்த முடிவையும் எடுக்க முடியாத அளவுக்கு, மன்னார்குடி அதிகாரம் அவரைக் கட்டிப் போட்டிருக்கிறது. அவர்களை மீறி எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறார் ஓ.பி.எஸ். முன்பு ஒருமுறை முதல்வரின் அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தபோதும், பன்னீர்செல்வத்தை சந்திக்க, அவருடைய அலுவலகத்துக்குச் சென்றார் ஸ்டாலின். அப்போது போனில் யாருடனோ அனுமதி கேட்டிருக்கிறார். எதிர்முனையில் பேசியவர்களும், ' மனுவை வாங்கிக் கொள்ளுங்கள். எந்த உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டாம்' எனக் கூறியுள்ளனர். அதைத்தான் அவரும் கடைபிடித்தார். முதல்வரால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என்பதை மக்கள் முன் வெளிப்படுத்தி, ஓ.பி.எஸ்ஸை பலவீனப்படுத்துவது ஒருபுறம், நம்பிக்கை வாக்கெடுப்பு என்று வரும்போது, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுக்கும் வேலையில் தி.மு.க ஈடுபடலாம். அப்போது, ஸ்டாலின் தயவில் முதலமைச்சர் என்ற பெயரும் கிடைக்க வாய்ப்புள்ளது. கோட்டைக்குள் நடக்கும் அனைத்து விவகாரங்களும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனை உணர்ந்து நிதானமாக காய் நகர்த்தி வருகிறார் சசிகலா" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
"அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர்களுக்கு கார்டனில் இருந்து ஓர் உத்தரவு சென்றுள்ளது. 'முதலமைச்சர் சசிகலா என டி.வி விவாதங்களில் யாரும் பேச வேண்டாம். மறு உத்தரவு வரும் வரையில் இதுதொடர்பான தலைப்புகளைத் தவிர்த்துவிடுங்கள்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல் சூழல்கள் எதுவும் சாதகமில்லாததால்தான், இப்படியொரு முடிவை கார்டனில் உள்ளவர்கள் எடுத்துள்ளனர். கூடவே, கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வெளியிட்டு வரும் அதிரடிகளை மன்னார்குடி உறவுகள் கொதிப்புடன் கவனித்து வருகின்றனர். 'சசிகலா முதல்வரானால்தான் என்னுடைய அரசியல் பிரவேசம் நல்லபடியாக அமையும். அவருக்கு எதிராகப் போட்டியிட்டு, தாய்மார்களின் ஆதரவோடு நான் வெற்றி பெறுவேன். ஜெயலலிதா மீது பாசம் கொண்ட அனைத்து அ.தி.மு.க தொண்டர்களும் என்னுடன் இருக்கின்றனர். உசிலம்பட்டியில் அவர் போட்டியிட்டாலும், களத்தில் நேரடியாகச் சந்திப்பேன். விரைவில் என்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவிப்பேன்' எனப் பேட்டி அளித்தார்.
தினம்தினம் தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன்பு அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். சசிகலா எதிர்ப்பை முன்வைக்கும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரும், தீபாவை முன்னிறுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். ' சசிகலா பிரசாரத்துக்குப் போனால், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி உள்ளிட்டவர்கள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதுவே, தீபா பிரசாரத்துக்குச் சென்றால் எந்த ஓர் அமைச்சரின் தயவும் தேவையில்லை. இயல்பாகவே மக்கள் குவிந்துவிடுவார்கள். இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது' என அவருக்கு ஆலோசனை கூறி வருகின்றனர். எதிர்ப்பாளர்கள் அனைவரும் தி.நகரில் குவிந்து வருவதை உளவுப்பிரிவு போலீஸார் தீவிரமாக கவனித்து வருகின்றனர். கோட்டைக்குள் நுழையும் வரையில், அமைதி காக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் சசிகலா. நடக்கும் சூழல்கள் எதுவும் மன்னார்குடிக்குச் சாதகமாக இல்லை" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.
"கடந்த சில நாட்களாக, அமைச்சர்கள் உள்பட யாருமே சின்னம்மா முதல்வர் என்று சொல்வதில்லை. கார்டனில் இருந்து உத்தரவு வந்ததா?" என அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் ஆவடி குமாரிடம் கேட்டோம். "அப்படி எந்த உத்தரவும் வரவில்லை" என ஒற்றை வரியோடு முடித்துக் கொண்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.