Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 3, 2017

வவுனியா ஓமந்தை பகுதியில் தாயும் ஏழு வயது மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!! ( படங்கள், வீடியோ)


வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் இருந்து தாயும், மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீட்டுக கிணற்றில் இருந்து இளம் தாய் ஒருவரும் அவரது 7 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுளளனர்.

குறித்த வீட்டில் வசித்து வந்த குறித்த தாயின் மாமியார் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மாமனார் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டு நின்றுள்ளார். கணவன் வேலை நிமிர்த்தம் கிளிநொச்சிக்கு சென்றிருந்தார்.
இதன்போது குறித்த தாயும், மகனும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
கிராம அலுவலர் அலுவலகத்திற்கு சென்ற மாமியார் காலை 11 மணியளவில் சிறுவனுக்கு ஜெலி வாங்க்கி கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயையும, மகனையும் காணவில்லை.
இதனையடுத்து அவர்களை தேடிய போதே அவர்களது சடலம் வீட்டில் இருந்த கிணற்றில் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஓமந்தைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த சதீஸ்வரன் சுதாசினி வயது 30), சதீஸ்வரன் டினோஸன் (வயது 07) என்பவர்களாவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த வியாழக் கிழமையே (29.12.2016) குறித்த சிறுவன் தனது 7வது பிறந்த தினத்தை கொண்டாடியிருந்தமை குறிபபிடத்தக்கது.
குறித்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்டதா அல்லது தற்கொலையா என்ற சந்தேகம் எழுவதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
DSC_0002DSC_0013DSC_0018IMG_1471IMG_1476IMG_1482

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.