January 9, 2017
ஆன்லைன் புக்கிங்..! கோடிக்கணக்கில் அபேஸ் செய்த..! பலே லேடி..!!
தாய்லாந்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் அமெரிக்காவின் விர்ஜினியாவில் வேலை செய்துவந்துள்ளார். உலகின் முன்னணி நிறுவனங்களின் விலை மதிப்பு மிக்க கைப்பைகளை ஆன்லைன் மூலம் வாங்குவார்.
அவ்வாறு ஆர்டர் செய்த கைப்பையைப் போல அச்சு அசலாக சீனாவில் இருந்து போலி கைப்பைகளை வாங்கி வைத்திருப்பார். தான் ஆர்டர் செய்த ஒரிஜினல் பை கைக்கு வந்தவுடன் பிடிக்கவில்லை என்று, போலி பையைத் திருப்பி அனுப்பி வைத்துவிடுவார்.
அந்த நிறுவனமும் பைக்குரிய பணத்தை மீண்டும் அவர் வங்கிக்கே திருப்பிச் செலுத்திவிடும். ஒரிஜினல் பைகளை ஆன்லைனில் நல்ல விலைக்கு விற்றுவிடுவார். அமெரிக்காவின் 12 மாகாணங்களில் இப்படிப் பைகளை வாங்குவதும் போலி பைகளை அனுப்பி வைப்பதுமாக இருந்திருக்கிறார்.
இதற்காக 16 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திருக்கிறார். கோடிக்கணக்கில் பணம் புரண்டது. ஒருகட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் டி.ஜே. மாக்ஸ் நிறுவனம் பிரபிட்சாவின் ஏமாற்று வேலையைக் கண்டுபிடித்துவிட்டது.
காவல்துறையின் உதவியோடு அதிரடியாக பிரபிட்சாவின் வீட்டுக்குள் நுழைந்தபோது 572 கைப்பைகளைக் கைப்பற்றினர். இதில் ஒரிஜினல் பைகளும் போலி பைகளும் கலந்திருந்தன. டி.ஜே. மாக்ஸ் நிறுவனத்தில் மட்டும் 226 கைப்பைகளை வாங்கி, போலி பைகளை அனுப்பி வைத்து இருந்திருக்கிறார்.
இதன் மூலம் பல கோடி ரூபாய்களை இந்த நிறுவனத்தில் இருந்து மட்டும் பெற்றிருக்கிறார். வசமாக மாட்டிக்கொண்ட அந்த பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் தனது குற்றத்தை ஒத்துக்கொண்டார்.
இவர் குழந்தையிலிருந்து பெற்றோரால் மனத்தாலும் உடலாலும் மிக மோசமாக நடத்தப்பட்டதினாலும், மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது வக்கீல் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து 30 மாதங்கள் சிறைத் தண்டனையும், ஏமாற்றியவர்களுக்கு உரிய பணத்தையும் கொடுத்துவிட வேண்டும் என்று கூறியிருக்கிறது நீதிமன்றம்.
ஆன்லைன் புக்கிங்..! கோடிக்கணக்கில் அபேஸ் செய்த..! பலே லேடி..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.