January 28, 2017
வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை கடும் சரிவு இதே போல் தமிழர் விரோத அரசியலும் ஆகுமா?
வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை கடும் சரிவு: ஜல்லிக்கட்டு போராட்டத்தையடுத்து விழிப்புணர்வு இதே போல் தமிழர் விரோத அரசியலும் ஆகுமோ என அரசியல் வாதிகள் மற்றும் ஆளும் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர் அதனால் தான் என்னமோ சட்டசபை என்று பாராமல் உலர தொடங்கிவிட்டனர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தையடுத்து தமிழ்நாட்டில் திரையறங்குகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. ஜல்லிக்கட்டு புரட்சி தமிழகம் முழுவதும் எதிர்பாராத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நியநாட்டு குளிர்பானங்கள் பயன்படுத்த பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மார்ச் 1ம் தேதி முதல் வணிகர்களும் வெளிநாட்டு பானங்களை விற்கமாட்டோம் என அறிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடலூரில் உள்ள சினிமா திரையறங்குகளில் பெப்சி, கொக் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் கடலூரில் உள்ள உணவக உரிமையாளர்களும், பள்ளி கேன்டீன் உரிமையாளர்களும் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பதில்லை என முடிவு செய்துள்ளனர். இதனால் இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பீட்சா, பர்கர் போன்றவற்றை படிப்படியாக குறைக்க தொடங்கியுள்ளனர். அவற்றுக்கு பதிலாக கடலைமிட்டாய், பனியாரம், தேன்மீட்டாய் போன்ற நாட்டு பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை கடும் சரிவு இதே போல் தமிழர் விரோத அரசியலும் ஆகுமா?
Reviewed by மறத்தமிழன்
on
January 28, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.